தலைவர் கலைஞர் 92 ஆம் பிறந்தநாள் கட்டுரை :
" அளந்து பேசு அதற்காக அளக்காதே ! நினைத்துப் பேசு ; ஆனால் நினைத்ததையெல்லாம் பேசாதே " இது தலைவர் கலைஞர் அவர்களின் வார்த்தை.இக்கருத்தை முன்னுரையாக கொண்டே என் பிறந்தநாள் கட்டுரை முன்னுரையை தொடங்குகிறேன்.எனின் இதில் இடம்பெறும் ஒவ்வொரு கருத்துகளும் உண்மையான தலைவர் கலைஞர் தமிழகத்திற்கு கிடைத்தது பொக்கிஷம் அயாராது தலைவர் தமிழ் மொழிக்கும் , தமிழர் முன்னேற்றத்திர்க்கும் ஒய்வு அறியாமால் உழைத்துக் கொண்டே இருக்கிறார்.
" சென்று வா தம்பி ! செறுமுனை நோக்கி ! என்று சிகப்பும் , கருப்பும் கலந்த இரு வண்ணக்கொடியை அண்ணாவின் கரங்களால் ஒப்படைக்கப்பட்டு களம்புகுந்து , காடு திருத்தி , நாடு திருத்தி , பகுத்தறிவு பாதையை மக்களிடம் புகுத்தி நமது திமுகழகத்தை இரும்பு கோட்டையினும் உறுதியாய் தலைமை தாங்கி தந்தை மகனை கை பிடித்து நல்வழியில் அழைத்து செல்வதுபோல் தலைவர் கலைஞர் நம்மையும் தமிழகத்தையும் நல்லதோரு வளர்ச்சி பாதையில் அழைத்து செல்கிறார். தலைவர் பிறந்த பிறந்தநாளில் தலைவர் பற்றி எழுத கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி கூறி கட்டுரையை தொடர்கிறேன்.
சுதந்திரதியாகிகளின் கலைஞர் :
தலைவர் கலைஞர் நமது நாட்டு விடுதலைக்காக போரிட்ட தமிழக தியாக வீரா்களுக்கு செய்த நற்பெயர்கள் என்னவென்று தெரியுமா ? தோழர்களே ! தூத்துக்குடி என்றதும் "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரனாரின் நினைவு தான் நமக்கு வரும், அத்தைகைய வ.உ.சி அவர்கள் இழுத்த செக்கு தமிழகத்தின் எங்கோவொரு முலையில் கவனிப்பாரற்று கிடந்ததை கண்ட கலைஞர் , கழக ஆட்சியில் தமிழகத்தின் தலைநதலுக்குக் கொண்டு வந்து அனைவரும் பார்க்கத் தக்க வகையில் அமைத்தவர் கலைஞர்.வ.உ.சி அவர்களின் இல்லத்தை நினைவுச்சின்னமாகமாற்றியது திமுக ஆட்சி அதுமட்டுமா ? கட்டபொம்மன் அவர்களுக்கு நினைவுக் கோட்டை கட்டபொம்மனின் வாரிசுகள் 204 பேருக்கு குடியிருப்புகள் , அதுபோன்றே கட்டபொம்மன் சுந்தரலிங்கம் நகர் அமைத்து வீரன் சுந்தரலிங்கம் அவரது உறவினர் 200 பேருக்கு குடியிருப்புகள் ., வீரன் பூலித்தேவர்க்கு கழக ஆட்சியில் 53,04,000 செலவில் சிலை அமைத்ததோடு அவரது இல்லம் வரலாற்றுச் சின்னமாக (28/12/1998) அன்று அறிவித்தது திமுக ஆட்சி.
சேது சமுத்திர திட்டம் :
தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாகவும் , உலக நாடுகளே தமிழகத்தை கண்டு வியக்க வைத்த திட்டம் திட்டம் சேது சமுத்திர திட்டம் .200 ஆண்டுகளாக கிடப்பில்கிடந்த தமிழகத்தின் வளர்ச்சி திட்டத்தை நிறைவெற்றியவர் தலைவர் கலைஞர் .இத்திட்டத்தினால் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு இடையேயான 424 கடல்மைல் வரை குறையும், கப்பல் பயண நேரம் 30 மணி நேரம் குறைவதோடு , எரிபொருள் சேமிப்பு மற்றும் அந்நியச்செலாவணியும் சேமிப்பு அடையும்., கப்பல் வாடகைக்கட்டணத்தில் சேமிப்பு எற்படும், கப்பல்கள் அதிக பயணம் மேற்கொள்ள முடியும்.இத்திட்டம் முலம் தூத்துக்குடி துறைமுகமும் , தமிழகத்தின் தென்மாவட்டங்களும் வளர்ச்சிபெறும்.இரமேஸ்வரத்தில் மீன்பிடித்துறைமுகம் மேம்பாடு அடையும். இத்தகைய சிறப்புமிக்க திட்டம் ஜூலை 2-2005 அன்று 2,427.40 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டது. 2009,ஜூலை 27 வரை 831.80 கோடி ருபாய் செலவு செய்யப்பட்டுஉள்ளது.இத்திட்டம் மதவாதிகளால் கிடப்பில் போடபட்டுள்ளது.இத்திட்டம் தலைவர் கலைஞர் முயற்சியால் நிறைவேறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஏழைகள் , உழவர்கள் வாழ்வில் கலைஞர் :
ஏழை எளியோர்க்கு உதவும் ஆட்சி திமுக ஆட்சி என்பதே தலைவர் கலைஞர் அவர்களின் அரசு செயல்பாட்டால் நாம் அறியலாம்.அவற்றுள் சில 1இலட்சத்து 16 ஆயிரத்து 508 நிலமற்ற ஏழை விவசாய தொழலர்களுக்கு 1இலட்சத்து 33 ஆயிரத்து 688 ஏக்கர் இலவச நிலம், 1,78,00,240 குடும்பங்களுக்கு 2 ருபாய் வீதம் - 20 கிலோ அரிசி., 22,40,739 விவசாய தோழர் குடும்பங்களுக்கு 7000 கோடி ரூபாய் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்து உழவர்களின் வறுமையை ஒழித்தது தலைவர் கலைஞர் ஆட்சி.2,07,287 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கியதும் கழக ஆட்சிதான்.750 கோடி ரூபாய் செலவில் 1,40,84,922 குடும்பங்களுக்கு இலவச வண்ண தொலைகாட்சி வழங்கியது கழக ஆட்சிதான்., 220 கோடி செலவில் 11 லட்சம் குடும்பங்களுக்கு இலவச கேஸ் அடுப்பு வழங்கியது திமுக அரசு, நெசவாளர்களுக்கு, உழவர்களுக்கு இலவச மின்சாரம் , ஒரு விளக்குள்ள குடிசைகளுக்கு இலவச மின்சாரம் தந்தவர் தலைவர் கலைஞர்.
மகளிர் நலத்தில் தலைவர் :
பெண்கள் சமுகத்தில் சுயேட்சையாக யாரையும் எதிர்பார்க்கமால் வாழ தந்தை பெரியார் கனவாம் பெண்களுக்கு சொத்துரிமை பெற்றுத்தந்தவர் தலைவர் கலைஞர்.மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கி மகளிரை தொழிற்துறையிலும் முன்னேற வைத்தவர் தலைவர். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவிதிட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் திருமண உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் விதவைகள் மறுமணத் திட்டம், அன்னை தெரசா ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம் , அஞ்சுக அம்மையார் கலப்பு திருமண உதவித்திட்டம் முலமும் 73,665 ஏழை பெண்கள் திருமணத்திற்கு 110 கோடியே 49 லட்சத்து 75 ஆயிரம் ருபாயும், ஏழை கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகையாக 4 லட்சத்து 72 ஆயிரத்து 20 கா்ப்பினி பெண்களுக்கு 206 கோடியே 14 லட்சத்து 33 ஆயிரம் கோடி நிதி உதவி செய்தவர் தலைவர் கலைஞர்.
மாணவர் நலனில் தலைவர் :
ஈடுஇணையில்லா சமச்சீர் கல்வியை தந்தவர் கலைஞர் மனப்பாடம் செய்து படித்த மாணவர்கள் பாடப்பொருளும் உணர சமச்சீர் கல்வியில் எளிய நடையும், தெளிந்த விளக்கம் , விளக்கப்படம் , அறிவியல் கருத்துகளோடு மாணவர் விரும்பும் கல்வியை தந்தவர் கலைஞர்.2 முதல் 15 வயது வரை 71 லட்சம் குழந்தை மாணவர்களுக்கு சத்துணவுடன் வாரம் மூன்று முறை முட்டையும் , மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணசிட்டும், தமிழில் பயின்றோர்க்கு அரசு வேலைகளில் முன்னுரிமை , வேலையில்லா பட்டதாரிகளுக்குஉதவித்தொகையும் , முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு தொழிற்கல்வியில் கட்டணச்சலுகை தந்தவர் தலைவர்.
மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும் தலைவர் கலைஞர் ஆட்சியில்தான் 1990 இல் தொடங்கப்பட்டது.
தொழில்துறையில் தலைவர் ;
தமிழக மக்கள் வேலைவாய்ப்பு பெற தூத்துக்குடியில் ஸ்பிக் உரத்தொழிற்சாலை, டைடல் பார்க் - தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் , நோக்கியா, பென்ஸ், மற்றும் ஹூண்டாய் போன்ற பன்னாட்டு நிறுவனங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர் கலைஞர்.
சமுகநீதி மற்றும் , சமூக நலனின் தலைவர் :
1973 இந்தியாவிலேயே முதல்முறையாக மனிதனை வைத்து மனிதன் இழுக்கும் " கை ரிக்ஷா" வை ஒழித்தார்.
*பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடு (மண்டல் குழு 1990).
* அருந்ததியர்க்கு 3% உள் ஒதுக்கீடு.
* சிறுபான்மையினர்க்கு 3.5% இட ஒதுக்கீடு.
* உழவர்கள் தொழில் முன்னேற்றம் காண " உழவர் சந்தை மதுரையில் முதலில் தொடங்கப்பட்டு தமிழகமெங்கும் தொடங்கப்பட்டது.
* புதிரை வண்ணர்களுக்கு நலவாரியம்.
* தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்.
* அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பயிற்சி
என எண்ணற்ற திட்டங்கள் மூலம் சமுக புரட்சி எற்படுத்தியவர் தலைவர் கலைஞர்.
அரசர்களை உருவாக்கிய தலைவர் :
தலைவர் கலைஞர் 8 குடியரசு தலைவர்கள் (திரு. வி.வி.கிரி , திரு.பக்ருதின் அலி அகமது , திரு . நீலம்சஞ்சீவி ரெட்டி , திரு.கியானி ஜெயில்சிங் , திரு. கே.ஆர்.நாராயணன், திரு.ஏ.பி.ஜே.அப்துல்கலாம், திருமதி.பிரதிபா பாட்டில் , திரு பிரணாப் முகர்ஜி ) மற்றம் 6 பிரதமர்களை( திருமதி.இந்திராகாந்தி , திரு.வி.பி.சிங் , திரு.தேவேகவுடா, திரு.ஐ.கே.குஜ்ரால், திரு.அடல்பிகரி வாஜ்பாய் , திரு.மன்மோகன் சிங் ) உருவாக்கியவர் தலைவர் கலைஞர்.
முடிவுரை :
" கூடிக் கலைவதற்கோ, பகட்டைக் காட்டுவதற்கோ, பாடிக் களிபதற்கோ , பணம் சேர்ப்பதற்கோ ! இல்லை கழகம் என எண்ணிப் பணியாற்றி வரும் தலைவர் கலைஞர் ,என்றும் கழக கொள்கை முழங்கவும், கொள்ளை, கொலை தடுத்து நாட்டில் அமைதியும் , நிறைந்த வளமும் , இளைஞர் நலமும் பெற உழைப்பதே கழகமென உழைக்கும் தலைவர் அவர்தான் நம் தலைவர் கலைஞர் .இதன் காரணமாகவே, தலைவர் உழைப்பும் தியாகத்தாலுமே சட்டபேரவையில் 50 ஆண்டுகளாக பதவி வகிப்பவர் .1957 லிருந்து 2011 வரை போட்டியிட்ட சட்டமன்றத் தேர்தல்கள்(குளித்தலை, தஞ்சாவூர், சைதாப்போட்டை, அண்ணாநகர் 3 முறை, துறைமுகம் 2 முறை, சேப்பாக்கம் 3 முறை, தற்போது திருவாரூர் வரை ) அனைத்திலும் வெற்றிச்சரித்திரம் படைத்த தமிழனத்தனத் தலைவர் கலைஞரை ஆறாம் முறையாக முதல்வராக்கி தலைவரை வரலாற்றில் இடம்பெயரச் செய்வோம். அண்ணாவழியில் அயராது உழைப்போம், மாநில சுயாட்சி அமைப்போம்.