ஊரெல்லாம் உறங்கையிலே !
நடக்குதுங்க கச்சேரி !
தினம் தினம் அமராமல்
ஒத்தக்கால் கொண்டு !
நின்று தவம் செய்தே!
குளிக்கவும் மறந்த மரம் ?
இன்று பச்சைபசேலென பல்லை காட்டி
உலக அழகிற்கு போட்டியிடுதே !
நித்தம் வறண்டு !
பாரம் சுமந்து வந்த பூமிதாயும். .
ஒரே அடியாய் கொட்டிய கச்சேரியில் . .
தாகம் தீர்ந்து . .
வயிறு நிறைந்து . .
வாய்க்கால் ! கண்மாய் ! குளம் ! ஆறு நோக்கி !
அனுப்பி வைக்கிறாள் அமுதத்தை . .
எல்லாம் சரி தாங்க !
நீங்க மட்டும் ? சொட்டு கூட நனையாமல் ?
வான்கச்சேரி மழை ரசித்து எழுதுகிறாய் . .
உன்னோடு கொஞ்சி பேச அல்ல . .
கொட்டும் மழையில்
நனைந்த உடலை . .
நீ பூமியைக் ஒன்ற கொன்று கட்டிய கோட்டைக்குள் . .
நானும் வரவா ?
நெஞ்சில் ஈரம் இருந்தால் . .
அனுமதி . .
என காக்கையும் ! குயிலும் !
நனைந்தபடி கேட்குது . .
மரத்திலிருந்த படி ! மழையில் நனைந்தபடி !!
- இரா. முத்து கணேசு