Tuesday, August 29, 2017

139 பெரியார்

மான உணர்ச்சியும்,பகுத்தறிவும் ஊட்டிய பகுத்தறிவு பகலவனை எந்நாளும் போற்றுவோம்
#HBDPERIYAR139 https://t.co/M5IMzLD9BW

Sunday, July 30, 2017

தேவை

தேவை பிறக்கும் போதே
அதை நிரப்பும் பொருளும்
அதற்கான கண்டுபிடிப்பும்
வந்தே தீரும்

Wednesday, July 26, 2017

கோழைத்தனம்

சமூகநீதி போரில்
களம் கண்ட
வீரன்
பின்வாங்குவது
ராஐதந்திரமல்ல
கோழைத்தனம்.

இலட்சியவாதி

அடக்குமுறைக்கு ஆளாகினும்
இலட்சியத்தால்
ஒன்றுபட்டு உழைப்பவனை
எந்தவொரு
சர்வாதிகாரமும்
வென்றிடாது.

Friday, December 23, 2016

இன எழுச்சிப்பா

மூத்திர சட்டி தூக்கி !
எங்கள் சூத்திர பட்டம் ஒழித்த !
தாயும் ஆனவனே!

பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவைப் போல்
3.43 மடங்கு சுற்றி
இத்திராவிட நாட்டைச் சுற்றி;
பகுத்தறிவு பரப்பிய ஆதவனே!

ஈரோட்டு செல்வந்தா!
காடு மேடு உறங்கி!
கருமி வாழ்வு வாழ்ந்தது உம் குடும்பத்திற்கோ?
தமிழ் சமுகத்திற்கு!

திருக்குறள் புகழும், எழுத்து சீர்திருத்தமும்!
சுயமரியாதை உணர்வும்! பெண் உரிமையும்!
சமத்துவபுரமும்!
நீன் கொடையே!
திராவிட சமுகத்திற்கு. .

சூரிய ஒளி செல்லா திசையில்லை!
உம் காலாடி பாடா வீதியில்லை!
இத்தமிழ்நாட்டில்!

உம் எழுத்தும்! குரலும்!
உள்ளவரை !
உம் திராவிட சமுகம் வாழும்!
இன எழுச்சி பகலவா வாழ்க!
இனியில்லை பார்ப்பான் சூத்திரன் என திராவிடனை ஆள!

Monday, December 19, 2016

ஓடி வா ! திராவிடா!

ஓடி வா ! திராவிடா!
ஓடி வா ! திராவிடா!

ஆதி தோன்றி அகிலம் வாழும்
தமிழ்மொழி பேச
ஓடி வா ! திராவிடா!
ஓடி வா ! திராவிடா !

பாதியிலே தோற்றப்பட்டு மக்களிடம்
பிரிவு தன்னை தோற்றுவித்த சாதியை
வேரோடு ஒழிக்க
ஓடி வா ! திராவிடா!
ஓடி வா ! திராவிடா !

நம்மை காத்து வந்த முன்னோரே!
நட்டகல்லாக்கி!
மதுவில் சித்தம் கலங்கி
உளறி வைத்த கதைமாந்தரை!
கடவுளாக்கி! போலி கடவுள் மாயையால்!
மனிதரில் மதப்போரை புகுத்திட்ட
ஆரிய பூளுகுகளை நீக்கிட
பகுத்தறிவு பரப்ப ஈரோட்டு தலைவன் வழி!

ஓடி வா ! திராவிடா!
ஓடி வா ! திராவிடா!

Sunday, December 18, 2016

பெண் உரிமை

பிறந்தது. . பிறந்தது. .
எம் தந்தை பெரியாரின்
பெண் உரிமை பிறந்தது.

அகன்றது. . அகன்றது. .
அறிவுலக ஆசான் தந்த
சிந்தனை சூட்டில்
பெண் அடிமை அகன்றது. .

பறக்குது. . பறக்குது. .
தந்தை பெரியார் திராவிடர் கழக கொடி பறக்குது.
அதை காணும் போது எல்லாம்
காவியின் மேல் கொண்ட
அடிமைத்தனம் பறக்குது.

இருக்குது. .இருக்குது.
சுயமரியாதை இருக்குது
சமத்துவம் இருக்குது.

நோறுங்குது. . நோறுங்குது. .
முடநம்பிக்கை நோறுங்குது.
பெண்ணடிமை நோறுங்குது.
சாதி வேறுபாடு நோறுங்குது.

உடைப்போம்.
உடைப்போம்.
திராவிட நாட்டில்
காவி வந்தால் உதைப்போம்! உடைப்போம்!

நடப்போம். .
நடப்போம்.
என்றும் தந்தை பெரியார் வழி நடப்போம்.