நம் மனம் மியூசியம் போன்றது.எது கொள்ளத்தக்கதோ அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.எது தள்ளத்தக்கதோ அதைத் தள்ளி விடுங்கள்.
காலை வணக்கம் உடன்பிறப்புகளே !
நம் மனம் மியூசியம் போன்றது.எது கொள்ளத்தக்கதோ அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.எது தள்ளத்தக்கதோ அதைத் தள்ளி விடுங்கள்.
காலை வணக்கம் உடன்பிறப்புகளே !
உழைப்பே செல்வம் - உழைப்பார்க்கே உரிமையெல்லாம் உழைப்பாளிக்கே உலகம் உரியது.
காலை வணக்கம் தோழர்களே !
திமுக தமிழகத்தில் என்ன செய்து கிழித்தது என கேட்ப்போர்க்கு சிறந்த பதில்
" மனிதரில் நீயும் மனிதன் மண் அன்று " என்று மக்களிடம் உணர்த்தியது மக்களின் அடிமை மனப்பான்மை , அடிமைத்தனத்தை ஒழித்தது திமுகவே !
சமத்துவம் , சகோதரத்துவம் நீதி கட்சி ,திராவிடர் கழகம் , தி.மு.கழகமின்றி அமைந்திரா ?
அப்போதைய நாட்டின் நடப்பு என்னவென்று தெரியுமா ?
1 . தீண்டத்தகாதவர் எனக் கருதப்பட்ட மக்கள் , மற்ற சாதிக்காரர்கள் வாழும் தெருக்களில் நடக்கக் கூடாது.
2 . முழங்காலுக்கு கீழே வேட்டி கட்டக் கூடாது.
3 . மேல் சாதியர் தெருக்களில் செருப்பு அணிந்து செல்லக் கூடாது.
4 . குடை பிடித்துச் செல்லக் கூடாது.
5 . மேல் துண்டு அணிந்து செல்லக் கூடாது.
6 . பெண்கள் ரவிக்கை அணியக் கூடாது.
7 . மண்குடத்தில்தான் நீர் கொள்ள வேண்டும்.
8 . உலோகப் பாத்திரங்கள் உபயோகிக்கக் கூடாது.
9 . அடிமைகளாகவே வேலை செய்ய வேண்டும்.
10 .சொந்தமாக நிலம் வைத்திருக்கக் கூடாது.
11 . திருமண நேரங்களில் கூட மேளம் வாசிக்கக் கூடாது.
12 . நிலம் குத்தகைக்கு வாங்கிச் சாகுபடி செய்ய கூடாது.
13 . குதிரை மீது ஊர்வலம் செல்லக் கூடாது.
14 . வண்டி மீதி ஏறிச் செல்லக் கூடாது.
15 . பொதுக்கிணற்றில் , குளத்தில் நீர் எடுக்கக் கூடாது.
16 . சுடுகாட்டுக்கு கூட தனிப்பாதையிலேயே செல்ல வேண்டும்.
17 . நீதிமன்றங்களில் குறிப்பிட்ட தூரத்துக்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும்.
18 . கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை.
19 . கோவில் கோபுரத்தைத்தான் வணங்க வேண்டும்.
20 . பள்ளிக்கூடங்களில் நுழைய இடமில்லை.
21 . பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதியில்லை.
22 . நாடகங்களில் , பொது நிகழ்ச்சிகளில் அனுமதி இல்லை.
23 . ஊர்களின் ஒதுக்குப்புறங்களில்தான் உழைக்கும் மக்கள் குடியிருப்புகள் அமைந்திருந்தன.
24 . அப்பகுதி மக்கள்
" சேரி மக்கள் " என இழிவுபடுத்தப்பட்டனர்.
இத்துணை சமுக அவலங்களை ஒழித்தது பெரியார் காட்டிய வழியிலும் , அண்ணாவின் கொள்கையாலும் , தலைவர் கலைஞர் அவர்களால் வழி நடத்தப்படும்
திமு கழகமே !
பெரியார் சொன்ன கொள்கை என்ன ?
1. ஒரே உலகம்
2. உலக மக்கள் எல்லாரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.
3. உலக சொத்துக்கள் , இன்ப துன்பங்கள் எல்லாம் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எல்லா மக்களுக்கும் பொதுவானது.
4 . ஒவ்வொருவரும் அவர்களது சக்திக்கு ஏற்றபடி உழைத்தாக வேண்டும்.
5, உள்ளதை ஒவ்வொருவரும் அவர்களது தேவைக்கு தகுந்தபடி அனுபவிக்கலாம்.
6 . இந்த உலகமும் , மக்கள் நலமும் , இன்பமும் தான் மக்களின் கவலையாக , நோக்கமாக இருக்க வேண்டும்.
சாதி முறைச் சடங்கு என்பனவெல்லாம் தந்திரமாக அமைக்கப்பட்ட பொருளாதாரச் சுரண்டல் திட்டமேயாகும்.ஆகவே சாதிமுறை ஓழிப்பதும் சமதா்மத் திட்டம்தான்.
காலை வணக்கம் உடன்பிறப்புகளே !