Saturday, January 24, 2015

மொழியே வழி

மொழிகளே மக்களின் எண்ணங்களையும் , விருப்பங்களையும் , கருத்துக்களையும் வெளிப்படுத்தும் கருவியாகும். மக்களை இணைக்கும் பாலமும் ஆகும்.மொழியின் பொறுமை அறிந்தே " மொழியே வழி " என கூறப்படுகிறது." மொழி அழியின் நாகரிகமும் மக்களின் கலாச்சரமும் அழியும் " இதுவே உண்மை. தமிழ்மொழி நம் தாய் மொழி அது மட்டுமா ? தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிக்கும் தமிழ் மொழியே தாய்மொழி. எம் மொழிக்கும் இல்லாத இலக்கியச்சுவை , இலக்கணச்சுவை உண்டு என்பது உலகே ஏற்று கொண்ட ஒன்று. அத்தகைய தமிழ்மொழியை அழிக்க நடந்த சதியும் , அத்தகைய சதியே தமிழ் மக்கள் ஐனநாயக முறைப்படி வெற்றி பேற்ற வரலாறே
" மொழிப்போர் " வரலாறு. இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு என்றும் மட்டும் கூற முடியாது நெஞ்சில் நிறுத்த வேண்டிய வரலாறு . இந்தி மொழியை இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக்கவும் மற்றும் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் " இந்தி மொழியை " கல்வி பாடத்திட்டங்களில் கட்டாய பாடமாக கொண்டு வர முயற்சி நடந்தது எப்போது தெரியுமா ? நண்பர்களே 1937 சென்னை மாகாணத்தில் முதல் முறையாக காங்கிரஸ் வெற்றி பெற்றுது அப்போது இராஐகோபாலச்சாரி இந்தி மொழியை கட்டாய படமாக கொண்டு வந்தார். இச்சட்டம் பிறப்பிக்கபட்டதுமே அப்போது எதிர்கட்சியாக இருந்த நீதிகட்சி, ஈ.வெ.ரா (பெரியார்) இந்தி எதிர்ப்பு மாநாடுகள் , உண்ணாவிரதம், பேரணிகள்.  மறியல் போராட்டங்கள் என என்னற்ற போராட்டங்களில் விளைவாக அடிபணிந்தது காங்கிரஸ் அரசு இந்தி திணிப்பை கிடப்பில் போட்டது 2 உயிரையும், 1198 பேரை கைது செய்த பிறகு. 1939 அப்போதைய பிரித்தானிய ஆளுநர் திரு. எர்ஸ்சின் பிரபு பிப்ரவரி 1940 இந்தி கல்வியை விலக்கினார்.இந்தியாஙவிடுதலை பெற்றது.அப்போது என்ன கூறினார்கள் தெரியுமா ?1950 களில்  ஒர் சட்டம் வந்தது 15 ஆண்டுகள் ஆங்கிலம் அலுவல்மொழியாக தொடருமென , இதுவும் இந்தி திணிப்பின் அரம்பமே 15 ஆண்டுகள் அடுத்து 1965  இந்தி ஆட்சி மொழியாக்கப்படும் என அரசு அறிவித்தது.அப்போது இந்தியாவின் பிற மாநிலங்களை விட தமிழகத்திலேயே இந்துஎதிர்ப்பு முழுவீச்சில் இருந்தது அதில்  திமுக இந்திஎதிர்ப்பில் முன்னனில் இருந்தது.1953 சூலை
" டால்மியாபுரம் "
போராட்டம் இந்தி எதிர்ப்பின் உச்சகட்ட போராட்டம் . டால்மியாபுரம் என்ற பெயர் வட இந்தியா தமிழகத்தின் மீது செலுத்தும் ஆதிக்கமாக நிணைத்த தலைவர் கலைஞர்
" டால்மியாபுரம் "
என்ற பெயரை தமிழில் " கல்லக்குடி " என்று மாற்ற வேண்டுமென போராட்டம் நடத்தினார் கலைஞர் 15 சூலை 1953 தலைவர் கலைஞர் பிற திமுக தொண்டர்களும் டால்மியாபுரம் தொடர்நிலையப் பெயர்பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை அழித்து இருப்புப் பாதையில் படுத்து வண்டிப் போக்குவரத்தை தடுத்தனர் அப்போது காவலரோடு நடந்த கைகலப்பில் இருவர் மரணமடைந்தனர் தலைவர் கலைஞரும் என்னற்ற உடன்பிறப்புகளும் சிறை சென்றனர்.செப்டம்பர் 21 ,1957 அன்று திமுக இந்தித் திணிப்பை எதிர்த்து மாநாடு நடத்தியது. அக்டோபர் 13 , 1957 அம் நாளை
" இந்தி எதிர்ப்பு நாளாக "  அறிவித்தது.ஐனவரி 28 1958 இராஜாஜி , பெரியார், அண்ணாதுரை மூவரும் " தமிழ்ப் பண்பாடு அகாடமி " யில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஒப்புமை வழங்கி ஆங்கில மொழி அலுவல் மொழியாக தொடர அதரவு தந்தனர்.சூலை 31 ,1960 அன்று மற்றொரு திறந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டை சென்னை கோடம்பாக்கத்தில் நடத்தியது.
இவ்வளவு போராட்டங்கள் மத்தியிலும் இந்தி திணிப்பு மட்டும் தொடர்ந்தது .1963 ஆம் ஆண்டு "அலுவல் மொழிச் சட்டம் "
நிறைவேற்றப்பட்டது.இதன்படி வேலைகளில் இந்திக்கு முதலிடம் தரப்பட்டது , குடுயியல் சேவை தேர்வுகளில் இந்தி கட்டாயமாக்கப்பட்டது, பள்ளிகளிலும் பயிலூடகம் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியாக மாறும் என அரசாணை பிறப்பித்தது நடுவணரசு.இதன்பின் இந்தி எதிர்ப்பு  முழுவதும் மேலும் வலுவடைந்தது.
நவம்பர் 1963 இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அரசியலமைப்பின் 17 வது பகுதியை எரித்ததற்காக அறிஞர் அண்ணா தமது 500 தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டார்.மார்ச் 7, 1964 , தமிழக  முதல்வர் .பக்தவத்சலம் மும்மொழித் திட்டம் கொண்டு வந்தார் .இத்திட்டம்படி பள்ளிகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் என மும்மொழி திட்டத்தை முன்மொழிந்தார்.இதற்கு திமுக தலைவர்கள் வி.பி.ராமன், கா.ந.அண்ணாதுரை, ஏ.மதியழகன் ,
கலைஞர் இவர்களோடு ராஜாஜி அவர்களும் இச்சட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மாணவர்களும் இச்சட்டத்திற்கு எதிராக எழுந்தனர்.இதன்படி இந்தி எதிர்ப்பு மாணவர்களை ஒருங்கினைக் " தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்புச் சங்கம் " என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இதன்படி 1965 ஐனவரி 25 குடியரசு நாளை திமுக" துக்க நாளாக " அறிவித்தது.25 ஐனவரியன்று அறிஞர் அண்ணா மற்றும் 3000 திமுக தொண்டர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
அதே நாள்
(25 ஐனவரி) மதுரை மாணவர்கள் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள திலகர் திடலுக்கு ஊர்வலம் சென்றனர்.மாணவர்கள் இந்தி அரக்கியின் கொடும்பாவியை எரித்து , " இந்தி ஒழிக " ( HINDHI NEVER , ENGLISH EVER ) என கோஷமிட்டவாறு சென்று கொண்டு இருந்தனர்.அப்போது காங்கிரசுகாரர்களுடன் மாணவர்களுக்கு கலவரம் உருவானது.
இக்கலவரத்தில் சிவலிங்கம் .
அரங்கநாதன் , வீரப்பன், முத்து, சாரங்கபாணி ,என்ற ஐந்து போராட்டக்காரர்கள் தங்கள் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர். தண்டபாணி , முத்து , சண்முகம் என்ற மூன்று போராளிகள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.இருவார காலத்தில் 70 பேர் இறந்ததாக அரசு தெரிவித்தாலும் ,
500 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என தகவல் கூறுகிறது.அதுமட்டுமா ? ஒரு கோடி ருபாய் இழப்பு எற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் விளைவாக பிப்ரவரி 11 , 1965 அன்று இந்தி திணிப்பு நீக்கப்பட்டது.
இருமொழிக் கொள்கை பின் தொடரப்பட்டது. தமிழ் மொழி ஆட்சிமொழியாகவும், ஆங்கிலம் அலுவல் மொழியாக பின்பற்றப்பட்டு இன்றுவரை பின்பற்று வருகிறது.நம் தமிழ்மொழி காக்க தங்கள் உயிர் தந்த தியாகிகளை இந்நாளில் நிணைந்து பார்ப்போம் .தமிழ்மொழி காக்க நாமும் தமிழராய் இணைவோம்.
தமிழ் உணர்வோடு வாழ்வோம்.

Saturday, January 17, 2015

தமிழ் சொல்லில் பெண்

தமிழ்மொழி சுவைமிக்கது என்னற்ற மொழிகளுக்கு தாயாகவும் , இலக்கியசுவைமிக்க மொழி, உலகமொழிகளில் இலக்கண, இலக்கிய , இசை வடிவமுடைய ஒப்பற்ற மொழி "தேன் கொஞ்சும் " தமிழ்மொழி. நம் தமிழ்மொழியில் சொற்கள் உருவாக உயிர் , மெய் மற்றும் உயிர் மெய் எழுத்துக்கள் முற்றிலும் தேவை. உயிர், மெய், உயிர்மெய் துணையின்றி தமிழ் சொற்கள் உருவாகா ?
அதுபோன்றே மனித இனம் உருவாக பெண் தேவை.அதலலே நம் பூமிக்கு " பூமாதேவி " என்று பெண்பாற் தன்மை தந்து பெண்ணியம் மதிக்கிறோம்.
அதனால் பெண்களை தமிழ் இலக்கியமும் எத்துணையோ ! வர்ணணை மற்றும் அழகு சொற்களால் அலங்கரிக்கிறது.
அதில் 2 சொற்களை பார்க்கும் போது " உயிர்எழுத்து " பெண்களுக்கு தீமை செய்தது.
"உயிர்மெய் "  மேன்மை தந்தது.அந்த இரு சொற்கள் என்ன தெரியுமா ?
"அ "மங்கலி , மற்றும் (சு)மங்கலி. இவ்விரண்டும் பெண்ணை சுட்டும் சொற்களே ! (அ )என்பது உயிர் எழுத்து , ( சு = ச் + உ) என்பது உயிர்மெய் எழுத்து.
"சுமங்கலி " பெண்களை  மேன்மைபடுத்துவது போன்றும் "அமங்கலி " பெண்களை இழிவுபடுத்துவதுகிறதே ? தமிழ்சான்றோர் என் பிழை செய்தனர்.