Tuesday, February 24, 2015

கவிஞர்.மு.க.ஸடாலின்

முத்தமிழ் தலைவர் கலைஞர் இளம்பருவம் முதல் இன்று வரை என்னற்ற கவிதைகளும், தமிழ் வளர்ச்சி கட்டுரைகள், இலக்கிய வளர்த்த தலைவர் அதுபோன்றே தளபதி ஸ்டாலின் தலை சிறந்த பேச்சாளர் என்பது நாடு அறிந்த ஒன்று. எனினும் தளபதி நல்ல கவிஞரும் கூட தளபதி.மு.க.ஸடாலினின் அல்ல கவிஞர் .மு.க.ஸடாலினின் சில கவிதைகள்

சேலம் கழக மாநாட்டில் தளபதி மொழிபெயர்த்த அமெரிக்க கவிஞர் வால்ட் விட்மன் ஆங்கில கவிதை

" இளைஞனே ! நீ யாருக்கும்
தலை வணங்காதே !
கைவீசிச் செல்
உலகைக் காதலி
செல்வரை
செருக்குள்ளவரை
மதவெறியரை
கிள்ளி எறி !
மனசாட்சியே
உன்தெய்வம்
உழைப்பை மதி
ஊருக்கு உதவு
உனக்கு எட்டாத
கட்டளைப்பற்றி
பிதற்றாதே
சிந்தனைச் செய்
செயலாற்று "

தந்தை வழி தளபதி முப்பெரும் விழாவில் அண்ணா பிறந்த நாள் கவியரங்கில் தளபதியின் கவிதை
" அப்பா வணக்கம் அவசரப்பட வேண்டாம் !
எப் - பா வணக்கம் என இயம்புகிறேன் கேளுங்கள் !
வாழ்வியலை நெறிப்படுத்தும் வள்ளுவரின் சொத்தப்பா !
ஏழிசையின் நலம் வழங்கும் இளங்கோவின் சந்தப்பா !
நாடெங்கும் நம்தமிழர் நரம்பெல்லாம் இரும்பாக்கிப்
பாடல் பொழிந்து வைத்த பாவேந்தன் உணர்ச்சிப்பா !
வெண்பா விருத்தப்பா விரைந்துவரும் அகவற்பா !
பண்படுத்தும் ஆசிரியப்பா என்று பா தெடுத்து
நமக்கே விழிப்புணர்ச்சி நல்கிட நம் கழகத்தின்
தமிழ்க் கவிஞர் கூட்டமிங்கே தரப்போகும் எழுச்சிப்பா !
அப் பா வணக்கம் தான் அனைவரும் சொன்னேன் !
அப்பா வணக்கம் தான் நான் சொன்னேன்.
தப்பா ? மணக்கட்டும் தமிழ்ப்பா வணங்குகிறேன்.
இளைஞர்களை வரவேற்கும் இயக்கம் இது ! இன்றைக்கோ
இளைஞரணி உம்மையல்லாம் இனிதே வரவேற்கிறது.
வாழைக்கும் கன்றாக வளராமல் ; ஆலமரம்
வீழாமல் தாங்கும் விழுதாக விளங்குங்கள் !

தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
" இளைஞர் எழுச்சி நாள் " வாழ்த்துக்கள்.

Tuesday, February 17, 2015

வீரவரலாறு பேசும் பஞ்சம்பட்டி

இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது குறுநில மன்னர்கள் போல் சில குறிப்பிட்ட பகுதிகளை ஜமீன்தார்கள் , பாளையக்காரர்கள் ஆண்டு வந்தனர்.அப்போது ராஐபாளையம் அருகே உள்ள கொல்லங்கொண்டான் பாளையக்காராக வாண்டையத் தேவன் இருந்துள்ளார்.இவருடைய மெய்க்காப்பாளர் மற்றும் தளபதியாக நல்ல மாடன் என்ற குடும்பர் இருந்துள்ளார்.
வாண்டையத் தேவனின் விடுதலை போராட்ட உணர்வுகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.இதனால் கொல்லன்கொண்டான் கோட்டையை கர்னல் டொனால்டு காம்பல் தலைமையில் பிரிட்டீஷ் படை முற்றுகையிட்டு பீராங்கி தாக்குதலை நடத்தி உள்ளது.தாக்குதல் மும்முரமானதால் கோட்டை இடியத் தொடங்குயது.இந்த வேளையில் பட்டத்துராணி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.ராணியை சுரங்கப்பாதை வழியாக தப்பிக்க வைக்க முயற்சி எடுக்கப்பட்டது. அதன்படி ராணியுடன் தேவந்திர குலத்தை சேர்ந்த தலைமை வீரர் ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டார்.ராணி பத்திரமாக அழைத்து செல்லப்பட்டு ஆண் குழந்தை பெற்றார்.ராணியை காப்பாற்றியது தேவேந்திரகுலம் என்பதால் கொல்லன் கொண்டான் அரண்மனை சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அருகில் உள்ள பஞ்சம்பட்டி ஊருக்கு முதல் மரியாதை வழங்கும் வழக்கம் பின்பற்றப்பட்டது.இந்த ஊரில் தேவேந்திரர்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.கொல்லங்கொண்டான் ஜமீன்தாரும், அருகில் உள்ள சேத்தூர் ஜமீன்தாரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளர்.இந்த ஜமீன்கள் இடையே சேவல் போட்டி நடைபெறுவது வழக்கமாக இருந்துள்ளது.இந்த போட்டியை நடத்துவதற்கு அவர்கள் பஞ்சம்பட்டியை தேர்வு செய்தனாராம் .இதற்கான காரணத்தை கேட்ட போது நம்முடைய வாரிசை காப்பாற்றிய வீரம் விளைந்த மண்ணான பஞ்சம்பட்டியே இந்த போட்டியை நடத்த சரியான இடம் என அதற்கு விளக்கம் அளிக்கம்பட்டதாம்.நாடு விடுதலையடைந்த பின்னும் இந்த சேவல் சண்டை போட்டி நடந்துள்ளது.1971 ம் ஆண்டு நடந்த யூனியன் தேர்தலில் பஞ்சம்பட்டியை சேர்ந்த பொட்டு போட்டான் என்ற தேவேந்திரரும் ஜமீன் பரம்பரையை சேர்ந்த ஹரிகரனும் போட்டியிட்டனர்.இதில் பொடெ்டு போட்டான் வெற்றி பெற்றார்.இது அப்பகுதியில் புதிய அரசியல் பிரச்சனையாக உருவெடுத்தது .இதனால் 1971 க்கு பிறகு சேவல் போட்டி நடைபெறவில்லை.இந்த வரலாறு தகவல் முனைவர் ராஜையா எழுதிய ஆய்வுக்களஞ்சியம் என்ற நூலிலும் , மணிகண்டன் எழுதிய வீரம் விளைந்த தமிழ் பூமி என்ற நூலிலும் உள்ளது.