இன்றைய நாகரிக உலகத்தில் நம் கைகளில் ஐந்து விரலோடு ஆறாம் விரலாக நம்மிடம் மாறிவிட்ட ஓர் தீங்கான பழக்கம் புகைத்தல். இக்கொடிய வழக்கத்தை விட்டு ஒழித்தால் நம்மிடம் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா ?
புகை விட்டதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று AMERICAN CHEMICAL SOCIETY கூறுவதை ஒர் 5 நமிடம் நேரம் ஒதுக்கி படித்து பாருங்கள்.
* புகைப்பதை நிறுத்திய 20 வது நிமிடத்தில் உங்கள் உடல் உயர் ரத்த அழுத்தம், உடல் வெப்பம் மற்றும் நாடித்துடிப்பு.இவை அனைத்தும் சரியான நிலைக்கு வருகிறது.
* 8 மணி நேரத்தில் SMOKERS BREATH மறைந்து விடுகிறது.
* இரத்ததிலுள்ள கார்பன் மோனாக்சைடு (CO ) அளவு குறைகிறது, உயிர் சுவாசம் ( O2) அளவு உயர்கிறது.
* ஒருவர் கடைசி சிகரெட்டை தூக்கி எறிந்தால் 24 மணி நேரத்தில் மாரடைப்பு எற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.
* 48 மணி நேரத்தில் உணர்வு நரம்புகளின் முனைப்பகுதிகள் மறுபடி ஒன்று சேருகின்றன.இதனால் நாவின் சுவையுணர்வு , மூக்கின் முகரும் சக்தி மேம்படுகிறது.
* புகை நிறுத்திய மூன்றாம் நாள் மூச்சுவிடுதல் சுலபமாகிறது.
* 2 அல்லது 3 மாதங்களில் இரத்த ஓட்டம் மேம்பட்டு நடப்பது சுலபமாகிறது, நுரையிரல் கொள்ளளவு 30 % அதிகரிக்கிறது.
* 1 முதல் 9 மாதங்களில் சுவாச குறைபாடு நீங்குகிறது.
* நுரையீரலிலுள்ள அசுத்தம் வடிகட்டும் திசுக்கள் ( சீரியா ) வேலை செய்ய அரம்பிக்கிறது.
* 1 வருடத்தில் இதய அழுத்த நோய்க்கான வாய்ப்பு பாதியாக குறைகிறது.
இத்தகைய நன்மைகள் நீங்கள் புகைப்பதை நிறுத்துவதால் கிடைக்கிறது.
எனவே சிந்தணை செய் மனமே .
புகைப்பதில்லை என்று முடிவு எடு !
உன்னையும் உன் குடும்பத்தையும் , சுற்றத்தையும் காப்பாற்று.
புகை இல்லா உலகம் செய்வோம்.
மரம் வளர்போம். மழை பெறுவோம்.
உடற்பயிற்சி செய்வோம். நோய்யின்றி வாழ்வோம்.