மூத்திர சட்டி தூக்கி !
எங்கள் சூத்திர பட்டம் ஒழித்த !
தாயும் ஆனவனே!
பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவைப் போல்
3.43 மடங்கு சுற்றி
இத்திராவிட நாட்டைச் சுற்றி;
பகுத்தறிவு பரப்பிய ஆதவனே!
ஈரோட்டு செல்வந்தா!
காடு மேடு உறங்கி!
கருமி வாழ்வு வாழ்ந்தது உம் குடும்பத்திற்கோ?
தமிழ் சமுகத்திற்கு!
திருக்குறள் புகழும், எழுத்து சீர்திருத்தமும்!
சுயமரியாதை உணர்வும்! பெண் உரிமையும்!
சமத்துவபுரமும்!
நீன் கொடையே!
திராவிட சமுகத்திற்கு. .
சூரிய ஒளி செல்லா திசையில்லை!
உம் காலாடி பாடா வீதியில்லை!
இத்தமிழ்நாட்டில்!
உம் எழுத்தும்! குரலும்!
உள்ளவரை !
உம் திராவிட சமுகம் வாழும்!
இன எழுச்சி பகலவா வாழ்க!
இனியில்லை பார்ப்பான் சூத்திரன் என திராவிடனை ஆள!