இப்போதைய தமிழகத்தின் பேசுபொருள் என்பதை தாண்டி தமிழக எதிர்காலத்தின் கேள்வியாகவும் உள்ளது +2 தேர்வு.பலரும் மத்திய அரசு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்துள்ளது அதுபோல அறிவிப்பு வெளியிட வேண்டும் என கூறுகின்றனர் அவர்கள் யார்? என சற்று ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் வீட்டில் +2 மாணவர்கள் இல்லை மற்றும் அவர்கள் மத்திய அரசின் அபிமானிகளாகவும் இருப்பார்கள்.உண்மை என்ன எனின் 1 ஆண்டு படிக்க வேண்டிய பாடத்தை தற்போதைய +2 மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகளாக இணைய வகுப்புகள், நேரடி வகுப்புகள் மற்றும் நேரடி தேர்வுகள் மூலம் சிறப்பாக கல்வி பெற்றுள்ளார்கள்.நமது மாநிலத்தின் தொழில்நுட்ப கட்டமைப்பு காரணமாக பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் 100 க்கு 150 சதவீதம் நம் மாணவர்களிடம் கற்றல் நடைபெற்றுள்ளது.ஆகவே கொரோனா பாதிப்பு தற்போது குறைய தொடங்கியுள்ளது தமிழக அரசின் செயல்பாடு இந்தியாவை மட்டுமல்ல உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.இச்சூழலில் பிற மாநிலங்களைப் போல் இல்லாமல், நம் தமிழக அரசுதான் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்து கேட்கிறது எந்த மாநிலமும் செய்யாத வகையில் இது அரசின் சிறந்த முன்னெடுப்பு .
பிற மாநிலங்கள் போல் இன்றி நமது மாநிலத்தில் அரசு,அரசு- உதவி மற்றும் தனியார் பள்ளிகள் அதிகம்.ஓர் தேர்வு அறைக்கு 10 மாணவர்கள் என தேர்வு நடத்தினாலும் , நமது மாநிலத்தில் பல பள்ளிகளில் இடம் மீதம் இருக்கும் எற்கனவே அரசு திடம்மிட்டு இருந்தது போல செப்டம்பர் மாதம் அரசுபோது தேர்வுக்கு சரியாக இருக்கும்.அது மட்டும் இன்றி ஓர் வேலை தேர்வு ரத்து ஏற்படின் பல தனியார் பள்ளிகளில் பணம் பெற்று மாணவர்களுக்கு மதிப்பெண் உயர்த்தி வழங்கிட வாய்ப்பு உள்ளது.அது மட்டுமின்றி பல அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் அரசு நடத்திய தேர்வுகளின் வினாத்தாள்களை மாணவர்களிடம் பார்த்து எழுதி அதன் மதிப்பெண்கள் பதிவேற்றப்பட நிகழ்வுகளும் நடந்து உள்ளது.இதனால் நன்றாக படித்து மாநிலத்திற்கு சிறப்பு சேர்க்கும் பல மாணவர்கள் கல்வி மற்றும் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.வரும் காலத்தில் இந்த நிகழ்வு எடுத்துகாட்டாகி மாணவர்களிடம் கல்வி , தேர்வு பயம் இருக்காது மந்தநிலை உருவாகும் . இதன் பாதிப்பு பிற்காலத்தில் எல்லா துறைகளிலும் எதிர் ஒலிக்கும்.பணம் படைத்தோர் மற்றும் அதிகார பலம் படைத்தோர் மட்டுமே பணி பெறும் சூழல் உருவாகும் இளைஞர் திறன் குறையும் .சமுகநீதி கேள்வி குறியாகும்
மத்திய அரசு சிபிஎஸ்இ தேர்வுகளை தான் ரத்து செய்துள்ளது நீட் தேர்வை ரத்து செய்யவில்லை.நாம் அரசு போதுத்தேர்வை ரத்து செய்வதால் நம் தமிழக மாணவர்களுக்கு எந்த பயனும் ஏற்பட போவதில்லை.நாளைய தமிழகத்தின் எதிர்காலத்தை காக்க வேண்டிய பொறுப்பு அரசிடம் உள்ளது.கல்வித்துறை அதிகாரிகள், சான்றோர்,பெற்றோரோடு கலந்து ஆலோசித்து எந்த ஒரு மாணவரின் எதிர்காலமும் பாதிக்காத வண்ணம் பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வி மற்றும் மதிநுட்பம் சிறந்தது என்பதே நம் திராவிட அரசுகளின் சாதனையாக உள்ளது.இந்த சாதனை மேலும் தொடர ,கொரோனா ஏற்படுத்திய சோதனையை மதிநுட்பத்தோடு கையாள்க! மாநில சுயாட்சி சிந்தனை உள்ள மாநிலம்! மாணவர்கள் எதிர்காலம் காக்கபடட்டும் ! நீட் ஒழிக்கபடட்டும் !
- இரா.முத்து கணேஷ்
ஆசிரியர்
No comments:
Post a Comment