Friday, December 31, 2021

2022

ஆண்டு கடந்தது! அபாயம் கடக்கவில்லை! 

ஆண்டுதான் கடந்தது! ஆயுள் அதிகமில்லை! 

ஆண்டும் கடந்தது! 
அச்சம் குறையவில்லை! 

ஆண்டே கடந்தது! 
அறிவை பெறுக்கவில்லை! 

மகிழ்வு காலம் எல்லாம் உண்டு! 
இக்காலத் தேவை கொண்டாட்டமல்ல! 

சமூக இடைவெளியே! 
தனித்திருப்போம்! கவலை மறப்போம்! 

முக கவசம் நம் கவசம்! 

#இனியஆங்கிலபுத்தாண்டுவாழ்த்துகள் 

- இரா. முத்து கணேசு

Thursday, December 23, 2021

தந்தை பெரியார் நினைவு நாள் கவிதை

மடமை நோய் தீர்த்தத்தில் மருத்துவர்! 
மக்களுக்காக வாதாடிய வழக்குரைஞர்! 
எங்கள் உரிமையை பெற்றுத்தந்த காவலர்! 
உம் போல் உழைத்தரில்லை எங்களுக்காக! 
நாட்டில் உம்கால் படாத இடமில்லை! 
அதனாலே காவிக்கு இங்கு இடமில்லை! 
நினைவில் என்றும் நீர் இருப்பீர்! 
நிமிர்ந்து நடக்கும் போதொல்லாம்! 
மறைவில்லா செங்கதிரோனே! 
என்றும் எங்கள் நினைவில் நீர்! 
பசுமரத்தாணி போல்!

Wednesday, December 22, 2021

சந்திப்போம் மகளே!

விடுமுறை என்பதே விடுதலை என மனம் கேட்டாலும்! 

விடுப்பு என்பது விரயம் என காலம் சொல்லும்! 

மழலை குரல் கேட்க துடித்தாலும் ! 

கடமை அது கனமும் நகராதே என கெஞ்சும்! 

நாள்கள் அது கழியும்! 

நாளை விடியும்! 

சந்திப்போம் மகிழ்வாய் மகளே!