தமிழகம் பல கலை.இந்திய நாகரிகத்தின் வெளிப்பாடான மாநிலம் , இம்மாநிலத்தில் உயர்வுக்கு காராணம் தமிழகத்தில் தந்தை பெரியாரால் கட்டுப்பாடோடு வளர்க்கப்பட்டுள்ள திராவிட கொள்கைகளே !
குலக்கல்வியை ஓழித்தது முதல் பெண் உரிமை , முடநம்பிக்கையை ஒழித்ததன் விளைவே ! இன்று நாம் வருணசிரம வளைத்தில் நாம் அகப்பாடமால் நம் தமிழ் மக்களை காக்கும் அரண் . தந்தை பெரியார் தொடங்கிய பகுத்தறிவு தீயை பெரியார் வழியே நின்று அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், பேராசிரியர் , ஐயா.வீரமணி , ஐயா.சுப.வீ , என எண்ணற்ற கொள்கையாளர்களால் இந்த " தீப்பந்தம் " உயர்த்தி பிடிக்கப்பட்டதன் விளைவே அதன் பகுத்தறிவு ஒளியில் நாம் தலை உயர்த்தி , நெஞ்சை நிமிர்த்தி , மூட நம்பிக்கை பரப்பிட்ட கயவரோடு சமமாய் , அத்துணை ஜாதினரும், மதத்தினரும் ஒன்று கூடி " தமிழன் " என்ற ஒற்றை முகவரில் நாம் முல காரணம் திராவிட கொள்கையே !
இம்முகவரியை மாற்ற எத்துணை சதிகள் பின்னப்படுகிறது என்பது நம் கண்ணுக்கு பின்னால் நடக்கும் வித்தை , ஆட்சி மொழியாக்க இந்தி திணிக்க
" இந்து துவ " கொள்கையாளர்கள் நிலை உயர்ந்துள்ள காரணமாக முயற்சிகள் முழுவேகத்தில் நடைபெறுவதையையும் அதை நம்மை போல் திராவிட கொள்கையாளர்களால் ஒடுக்கப்படுவதையும் நாம் நாளும் கண்டு கொண்டுதான் உள்ளம் , " இருகை தட்டினால் தானே ஓசை " வரும் . ஆனால் நம்மில் எத்துணை பேர் கை தட்ட ஒன்று படுகிறோம் ? மதவாத சக்திகள் ஒன்று பட்டு நம்மை ஆட்சி செய்ய பெரிய முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது அதில் ஒன்று தான் " தாய் மதத்திற்கு திரும்புவோம் " என அதிகார வர்க்கம் சர்வ பலத்தோடு மக்களை பல உபயம் (மிரட்டல்) தந்து இந்து மதத்திற்கு திருப்புவது .
அதுமட்டுமா? அமித்ஷா தமிழக வருகையையும் இந்த வழி பின்பற்றலே!
இந்த முயற்சி 1900 ஆண்டு முதலே தொடர்ந்து நடக்கிறது , இம்முயற்சி திராவிடர் கழகம் , திமுக எடுத்த சிரிய பணிகளாலும் , திராவிட கொள்கையாலும் முறியடிக்கப்பட்டு வருகிறது இதன் விளைவால் தான் தமிழகத்தில் திமுக மக்கள் கட்சியாக அங்கிகரிக்கப்பட்டு உள்ளது. இதனை குறைக்கவே கழகம் மீது முட்டை,முட்டையாக சேர்த்து ஊழல் குற்றம் கூறி மக்கள் மனதில் விஷம் கலக்கப்படுகிறது.
இந்த முட்டைகள் கூட விரைவில் நியாயப்படி போலி என்று உடையும் காலம் விரைவில் வரும். பதவிக்கு , பணம் சேர்க்க நம்மில் இணைந்த கூட்டம் ஒடும் , ஆனால் திராவிட கொள்கை, மாநில சுயாட்சி, இந்தி எதிர்ப்பு , முட நம்பிக்கை எதிர்ப்பை பின்பற்றும் நம் போன்ற உண்மை தொண்டர்கள் உள்ள வரை எவர் வந்தாலும். திராவிட கொள்கைக்கே வெற்றி !
Sunday, December 21, 2014
உயர்த்தி பிடிப்போம் ! திராவிட கொள்கையை!
Monday, December 15, 2014
இனமான பேராசிரியர்
டிசம்பர் மாதம் என்றதும் " டிசம்பர் " பூக்கள் தான் பலர் நினைவுக்கு வரும். அனால் தமிழர்க்கோ ! அதைவிட பெருமையோடு கூற வேண்டுமானால் திராவிட மொழி உணர்வை கொண்டோர்க்கு 19 டிசம்பர் என்றதுமே ஐயா.இனமான பேராசிரியர்.க.அன்பழகன் அவர்கள் பிறந்தநாள்தான் சட்டென்று ஞாபகம் வரக்கூடும் . இப்படி நான் கூறியதை படிக்கும் இளைஞர்க்கு பேராசிரியர் என்ன செய்தார் என்று கேட்பாரே ? இளைஞர்களே ! சற்று இப்பதிவை படியுங்கள் . பேராசிரியர் வாழ்வை, அவர் தொண்டுகளை சூருக்கமாக தெரிந்து கொள்ளலாம். பேராசிரியர் 19 டிசம்பர் 1922 ஆம் அண்டு , தலைவர் கலைஞர் தற்போது சட்டப்பேரவை உறுப்பினாராக பணியாற்றி கொண்டு இருக்கும் திருவாரூரில் உள்ள "காட்டூர் "எனும் கிராமத்தில் எம்.கல்யாண சுந்தரனார் மற்றும் சுவர்ணம்மாள் மகனாக தமிழகத்தில் " சூரியகாந்தி " பூவாக பிறந்தார்.ஐயாவின் இயற்பெயர்
" இராமையா " .இளமையிலேயே கல்வியிலும் , சமூக பற்றும் உடைய ஐயா அண்ணாமலை பல்கலைக்கழக முதுகலைமானித் தமிழ் பட்டத்தை 1946 இல் வெற்றிகாரமாக கற்றுணர்ந்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்தார். அப்போது இந்தி திணிப்பு அரங்கேறிய காலம் , நாடி வந்த இந்தி, தமிழ் மொழியை ஒழிக்க நிணைத்த காலம் , தமிழ் காக்க ஈரோட்டு சிங்கம் பொரியார் , அறிஞர்.அண்ணா , கலைஞர் என்ற தலைவர்களால் இந்தி ஒட காத்திருந்த காலம் . அப்போது தன்னையும் இந்தி போராட்டத்தில் இணைத்துக் கொண்டு தமிழின மானம் , மொழி காக்க பேராசிரியரும் போராடினார். இவராது கம்பீர பேச்சு மாணவர்களை ஒன்றிணைத்தது என்று கூறினால் அது மிகையாகது . அப்போது இன்று வரை தலைவர் கலைஞரோடு மக்களுக்காக , தமிழ் மொழிக்காக போராடுபவர் பேராசிரியர். தி.மு.க ஆரம்பகாலம் முதல் முக்கிய பங்கு வகிப்பவர், 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக பணியாற்றி என்பதை விட மக்கள் இயக்கமாம் திமுக வை இரும்பு கோட்டையாக மாற்றியவர். ஐயா அவர்களின் பேச்சில் தமிழர் இனம் , சுயமரியாதை , தமிழர் வாழ்கின்ற நிலை கூறித்து அதிகம் இருப்பதால் கழகத்தாராலும் , மக்களாலும்
" பேராசிரியர் " என அன்போடு அழைக்கப்படுகிறார்.
ஐயா. 1962 முதல் 1967 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1967 முதல் 1971 வரை நாடாளுமன்ற உறுப்பினாராகவும், 1971 ஆம் திமுக அரசின் சமூக நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 1984 ஆம் ஆண்டு இலங்கை வாழ் மக்களின் தமிழ் ஈழக்கோரிக்கையை வழிமொழிந்து மக்கள் நலனுக்காக தன்னுடைடுய சட்ட மன்ற உறுப்பினார் பெறுப்பை ( பதவியை)
தலைவர் கலைஞரோடு துறந்தவர். அடுத்தாக நமது கழக ஆட்சியில் நிதி மற்றும் கல்வி அமைச்சராகவும் பணியாற்றியவர். சிறந்த எழுத்தாளர் இவர் எழுதிய சில புத்தகங்கள் தமிழர் திருமணமும் இனமானமும் , உரிமை வாழுது , தமிழ்கடல் , அலை ஓசை , விடுதலைக் கவிஞர் , இனமொழி வாழ்வுரிமைப் போர், தமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார் , தமிழனக் காவலர் கலைஞர் , நீங்களும் பேச்சாளர் ஆகாலம் , தமிழ்கடல் அலை ஓசை பரவும் தமிழ்மாட்சி, விவேகானந்தர் விழைத்த மனித தொண்டு , பல்கலைக்கழங்களில் பேராசிரியர்கள். இன்னும் பல நூல்களையும் , கட்டுரைகளையும் பல சமுக கட்டுரைகளையும்
இயற்றியுள்ளார்.
மொழிக்கும், இன உணர்வுக்கு , இன வளர்ச்சிக்கும் பெறும் தொண்டாற்றி வரும் பேராசிரியர் என்றும் வாழும் வரலாறு. ஐயா.பிறந்தநாளோடு தமிழ் இன, மொழி காக்க நாமும் உறுதி ஏற்போம். பெருமையுடைய பேராசிரியர்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Saturday, December 13, 2014
பயத்தின் வெளிப்பாடு
மனித பயத்தின் வெளிப்பாடு ,
அதை பயன்படுத்த தெரிந்த மனிதனின்
குறியிடுதான்
சிறு கடை
பெரிய அங்காடியாக தெருக்கு தெரு முழைத்திற்க்கும்
சிறு தெய்வம்
பெரிய தெய்வம்.
Wednesday, December 10, 2014
நீயா இந்து ?
நான் ஒரு இந்து என்று பெருமை பேசும் பேரறிவாளர்களைக் கேட்கிறேன்.இந்துமதப் புராணங்களில் வரும் ஒரு கடவுளாவது கள்ளன் . கட்குடியன் , காமச்சேட்டைக்காரன் , பிறன் மனை விழைபவன் என்னும் கொடிய குற்றங்களைச் செய்யாதவராக இல்லையே ஏன் ?
- அறிஞர் அண்ணா.
" மை " விளையாட்டு
ஆமை
மூயலாமை
கல்லாமை
தீமை !
கொல்லாமை
புறங்கூறாமை
வாய்மை
வலிமை
வளமை
மேன்மை !
" மை " பன்புத்தொகை எனின்.
இம் " மை "
ஏம் " மை " ????
Wednesday, December 3, 2014
நல்லவை
மக்களுக்கு நல்ல உணவு , நல்ல உடை , நல்ல கல்வி , நல்ல சிந்தணை தருவதுதான் ஒரு நல்ல அரசாங்கத்தின் கடமை .நல்ல மதத்தின் குறிக்கோள்.நல்ல இலக்கியத்தின் இலட்சியம்.
Monday, December 1, 2014
அறனெனப்படுவது
அறமென்பது துறவறத்தால் விளைவதே என்பர் சிலர் .அது தவறு . அறனெனப்படுவது இல்வாழ்க்கை என்பதும் காண வேண்டும்.
காலை வணக்கம் உடன்பிறப்புகளே !