டிசம்பர் மாதம் என்றதும் " டிசம்பர் " பூக்கள் தான் பலர் நினைவுக்கு வரும். அனால் தமிழர்க்கோ ! அதைவிட பெருமையோடு கூற வேண்டுமானால் திராவிட மொழி உணர்வை கொண்டோர்க்கு 19 டிசம்பர் என்றதுமே ஐயா.இனமான பேராசிரியர்.க.அன்பழகன் அவர்கள் பிறந்தநாள்தான் சட்டென்று ஞாபகம் வரக்கூடும் . இப்படி நான் கூறியதை படிக்கும் இளைஞர்க்கு பேராசிரியர் என்ன செய்தார் என்று கேட்பாரே ? இளைஞர்களே ! சற்று இப்பதிவை படியுங்கள் . பேராசிரியர் வாழ்வை, அவர் தொண்டுகளை சூருக்கமாக தெரிந்து கொள்ளலாம். பேராசிரியர் 19 டிசம்பர் 1922 ஆம் அண்டு , தலைவர் கலைஞர் தற்போது சட்டப்பேரவை உறுப்பினாராக பணியாற்றி கொண்டு இருக்கும் திருவாரூரில் உள்ள "காட்டூர் "எனும் கிராமத்தில் எம்.கல்யாண சுந்தரனார் மற்றும் சுவர்ணம்மாள் மகனாக தமிழகத்தில் " சூரியகாந்தி " பூவாக பிறந்தார்.ஐயாவின் இயற்பெயர்
" இராமையா " .இளமையிலேயே கல்வியிலும் , சமூக பற்றும் உடைய ஐயா அண்ணாமலை பல்கலைக்கழக முதுகலைமானித் தமிழ் பட்டத்தை 1946 இல் வெற்றிகாரமாக கற்றுணர்ந்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்தார். அப்போது இந்தி திணிப்பு அரங்கேறிய காலம் , நாடி வந்த இந்தி, தமிழ் மொழியை ஒழிக்க நிணைத்த காலம் , தமிழ் காக்க ஈரோட்டு சிங்கம் பொரியார் , அறிஞர்.அண்ணா , கலைஞர் என்ற தலைவர்களால் இந்தி ஒட காத்திருந்த காலம் . அப்போது தன்னையும் இந்தி போராட்டத்தில் இணைத்துக் கொண்டு தமிழின மானம் , மொழி காக்க பேராசிரியரும் போராடினார். இவராது கம்பீர பேச்சு மாணவர்களை ஒன்றிணைத்தது என்று கூறினால் அது மிகையாகது . அப்போது இன்று வரை தலைவர் கலைஞரோடு மக்களுக்காக , தமிழ் மொழிக்காக போராடுபவர் பேராசிரியர். தி.மு.க ஆரம்பகாலம் முதல் முக்கிய பங்கு வகிப்பவர், 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக பணியாற்றி என்பதை விட மக்கள் இயக்கமாம் திமுக வை இரும்பு கோட்டையாக மாற்றியவர். ஐயா அவர்களின் பேச்சில் தமிழர் இனம் , சுயமரியாதை , தமிழர் வாழ்கின்ற நிலை கூறித்து அதிகம் இருப்பதால் கழகத்தாராலும் , மக்களாலும்
" பேராசிரியர் " என அன்போடு அழைக்கப்படுகிறார்.
ஐயா. 1962 முதல் 1967 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1967 முதல் 1971 வரை நாடாளுமன்ற உறுப்பினாராகவும், 1971 ஆம் திமுக அரசின் சமூக நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 1984 ஆம் ஆண்டு இலங்கை வாழ் மக்களின் தமிழ் ஈழக்கோரிக்கையை வழிமொழிந்து மக்கள் நலனுக்காக தன்னுடைடுய சட்ட மன்ற உறுப்பினார் பெறுப்பை ( பதவியை)
தலைவர் கலைஞரோடு துறந்தவர். அடுத்தாக நமது கழக ஆட்சியில் நிதி மற்றும் கல்வி அமைச்சராகவும் பணியாற்றியவர். சிறந்த எழுத்தாளர் இவர் எழுதிய சில புத்தகங்கள் தமிழர் திருமணமும் இனமானமும் , உரிமை வாழுது , தமிழ்கடல் , அலை ஓசை , விடுதலைக் கவிஞர் , இனமொழி வாழ்வுரிமைப் போர், தமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார் , தமிழனக் காவலர் கலைஞர் , நீங்களும் பேச்சாளர் ஆகாலம் , தமிழ்கடல் அலை ஓசை பரவும் தமிழ்மாட்சி, விவேகானந்தர் விழைத்த மனித தொண்டு , பல்கலைக்கழங்களில் பேராசிரியர்கள். இன்னும் பல நூல்களையும் , கட்டுரைகளையும் பல சமுக கட்டுரைகளையும்
இயற்றியுள்ளார்.
மொழிக்கும், இன உணர்வுக்கு , இன வளர்ச்சிக்கும் பெறும் தொண்டாற்றி வரும் பேராசிரியர் என்றும் வாழும் வரலாறு. ஐயா.பிறந்தநாளோடு தமிழ் இன, மொழி காக்க நாமும் உறுதி ஏற்போம். பெருமையுடைய பேராசிரியர்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Monday, December 15, 2014
இனமான பேராசிரியர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment