தமிழகம் பல கலை.இந்திய நாகரிகத்தின் வெளிப்பாடான மாநிலம் , இம்மாநிலத்தில் உயர்வுக்கு காராணம் தமிழகத்தில் தந்தை பெரியாரால் கட்டுப்பாடோடு வளர்க்கப்பட்டுள்ள திராவிட கொள்கைகளே !
குலக்கல்வியை ஓழித்தது முதல் பெண் உரிமை , முடநம்பிக்கையை ஒழித்ததன் விளைவே ! இன்று நாம் வருணசிரம வளைத்தில் நாம் அகப்பாடமால் நம் தமிழ் மக்களை காக்கும் அரண் . தந்தை பெரியார் தொடங்கிய பகுத்தறிவு தீயை பெரியார் வழியே நின்று அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், பேராசிரியர் , ஐயா.வீரமணி , ஐயா.சுப.வீ , என எண்ணற்ற கொள்கையாளர்களால் இந்த " தீப்பந்தம் " உயர்த்தி பிடிக்கப்பட்டதன் விளைவே அதன் பகுத்தறிவு ஒளியில் நாம் தலை உயர்த்தி , நெஞ்சை நிமிர்த்தி , மூட நம்பிக்கை பரப்பிட்ட கயவரோடு சமமாய் , அத்துணை ஜாதினரும், மதத்தினரும் ஒன்று கூடி " தமிழன் " என்ற ஒற்றை முகவரில் நாம் முல காரணம் திராவிட கொள்கையே !
இம்முகவரியை மாற்ற எத்துணை சதிகள் பின்னப்படுகிறது என்பது நம் கண்ணுக்கு பின்னால் நடக்கும் வித்தை , ஆட்சி மொழியாக்க இந்தி திணிக்க
" இந்து துவ " கொள்கையாளர்கள் நிலை உயர்ந்துள்ள காரணமாக முயற்சிகள் முழுவேகத்தில் நடைபெறுவதையையும் அதை நம்மை போல் திராவிட கொள்கையாளர்களால் ஒடுக்கப்படுவதையும் நாம் நாளும் கண்டு கொண்டுதான் உள்ளம் , " இருகை தட்டினால் தானே ஓசை " வரும் . ஆனால் நம்மில் எத்துணை பேர் கை தட்ட ஒன்று படுகிறோம் ? மதவாத சக்திகள் ஒன்று பட்டு நம்மை ஆட்சி செய்ய பெரிய முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது அதில் ஒன்று தான் " தாய் மதத்திற்கு திரும்புவோம் " என அதிகார வர்க்கம் சர்வ பலத்தோடு மக்களை பல உபயம் (மிரட்டல்) தந்து இந்து மதத்திற்கு திருப்புவது .
அதுமட்டுமா? அமித்ஷா தமிழக வருகையையும் இந்த வழி பின்பற்றலே!
இந்த முயற்சி 1900 ஆண்டு முதலே தொடர்ந்து நடக்கிறது , இம்முயற்சி திராவிடர் கழகம் , திமுக எடுத்த சிரிய பணிகளாலும் , திராவிட கொள்கையாலும் முறியடிக்கப்பட்டு வருகிறது இதன் விளைவால் தான் தமிழகத்தில் திமுக மக்கள் கட்சியாக அங்கிகரிக்கப்பட்டு உள்ளது. இதனை குறைக்கவே கழகம் மீது முட்டை,முட்டையாக சேர்த்து ஊழல் குற்றம் கூறி மக்கள் மனதில் விஷம் கலக்கப்படுகிறது.
இந்த முட்டைகள் கூட விரைவில் நியாயப்படி போலி என்று உடையும் காலம் விரைவில் வரும். பதவிக்கு , பணம் சேர்க்க நம்மில் இணைந்த கூட்டம் ஒடும் , ஆனால் திராவிட கொள்கை, மாநில சுயாட்சி, இந்தி எதிர்ப்பு , முட நம்பிக்கை எதிர்ப்பை பின்பற்றும் நம் போன்ற உண்மை தொண்டர்கள் உள்ள வரை எவர் வந்தாலும். திராவிட கொள்கைக்கே வெற்றி !
Sunday, December 21, 2014
உயர்த்தி பிடிப்போம் ! திராவிட கொள்கையை!
Subscribe to:
Post Comments (Atom)
தொடருங்கள் தோழர்
ReplyDelete