Saturday, September 23, 2017

பிச்சைகாரன்

நிரம்பி இருந்த தொடர்வண்டியில்
என் குரல் மட்டும் நிறைந்தது
நிறையவில்லை என் வயிறு

-பிச்சைகாரன்

Thursday, September 21, 2017

அது எது ?

நடக்கையில் சரிக்கிடும்!
தவளும் போது சிரித்திடும் !
பேசும் போது எளனம் செய்யும் !
பணி செய்தால் ஏவல் செய்யும் !
கொள்கை என்றால் முன்னேற்றாது !
கொட்டிக் கொடுத்தால் பொருக்கிடும்!
கேட்டால் கொடாது!

அது எது ?

சாதி பார்த்திடும் !
சமயம் பார்த்திடும் !
சகுனம் பார்த்திடும் !
சில்லறை பார்த்திடும் !
பிறர் சிரிக்கப் பார்த்திடும்!

அது எது ?

நன்மை செய்ய என்னாது !
நன்மை செய்வோரை மனிதனாய் என்னாது!
நாளும் மாறும் சூழ்நிலை என்னாது!
நீயும் நானும் புண் ஆனாலும் என்னாது!

அது எது ?

அது சுயநலத்தின் முகம்.

அது ஒரு சார்பான முகம்.

அது செல்வந்தனுக்கான முகம்.

அதுதான் இந்த " சமூகம் "

Monday, September 18, 2017

போர்களம்

வாழ்வு எனும் போர்களத்தில்
களம் காணும் வீரர் நாம்
தினம் போர்தான்
வெற்றி ஓர் முறையே
அதுவரை போரிடு
பின்வாங்காதே. .
@anbu17ganesh

Friday, September 8, 2017

மனம்

கிடந்தால் கிடத்தும்
நடந்தால் நாடனமாடும்
ஓடினால் பின் ஓடி வரும்
#மனம்
கிடக்க கல்லாமல் ஓடக் கற்றுக்கொள்ளுங்கள்.

Monday, September 4, 2017

பாரம்

ஓய்வு தராத பாடத்தை
பாரத்தை
தனிமை
தந்துவிடும். .

Sunday, September 3, 2017

முகவரி

வாழ்ந்து விட்டு போவது
வாழ்க்கையல்ல. .

வாழ வைத்துவிட்டு போவது
வாழ்க்கை. .

நித்தம் நாள்கள்
கடத்துவதும்
வாழ்க்கையல்ல. .

நாள் எல்லாம்
நம் நினைவை நிலைநிறுத்துவதே
வாழ்க்கை. .

தடைக்கல் கண்டு
பயந்தவனுக்கு
வாழ்க்கையல்ல. .

தடைக்கல் உடைய
உழைப்பனுக்கே
வாழ்க்கை. .

வாழ்க்கை வாழ . .
வாழ வேண்டும். .
நாளும் புதுப்புது
அனுபவம் தேடு
அதற்காக ஓடு. .
நானில்லை நாமாய்
உழைக்க கற்றுக்கொள்
பிறரை மதிக்க கற்றுக்கொள். .
பணிவு சமூகத்தில்
மதிப்பைத்தரும்
மதிப்பு சமூகத்தில்
முகவரி தரும் . .

முகவரியை தெளிவு செய்தால்
வரலாற்றிக்கு போய் செறும்
நம் முகவரி. .

அதற்கு முதல் வரி
முகவரி
தெளிவு.  .
உழைப்பு . .
விடா முயற்சி. .