Thursday, September 21, 2017

அது எது ?

நடக்கையில் சரிக்கிடும்!
தவளும் போது சிரித்திடும் !
பேசும் போது எளனம் செய்யும் !
பணி செய்தால் ஏவல் செய்யும் !
கொள்கை என்றால் முன்னேற்றாது !
கொட்டிக் கொடுத்தால் பொருக்கிடும்!
கேட்டால் கொடாது!

அது எது ?

சாதி பார்த்திடும் !
சமயம் பார்த்திடும் !
சகுனம் பார்த்திடும் !
சில்லறை பார்த்திடும் !
பிறர் சிரிக்கப் பார்த்திடும்!

அது எது ?

நன்மை செய்ய என்னாது !
நன்மை செய்வோரை மனிதனாய் என்னாது!
நாளும் மாறும் சூழ்நிலை என்னாது!
நீயும் நானும் புண் ஆனாலும் என்னாது!

அது எது ?

அது சுயநலத்தின் முகம்.

அது ஒரு சார்பான முகம்.

அது செல்வந்தனுக்கான முகம்.

அதுதான் இந்த " சமூகம் "

No comments:

Post a Comment