Thursday, November 8, 2018

பணமதிப்பிழப்பு

" எலியைப் பிடிக்க வீட்டை கொளுத்திய கதை" என்ற பழமொழி இன்றளவும் திட்டமிடாமல்,போதிய அறிவு,மனபக்குவம்,முன் அனுபவம்மின்மை,எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற முட்டாள்தனமான  முடிவை சொல்லும் பழமொழியாய் இருந்து வருகிறது.இப்பழமொழி மோடி அரசின் பெரும்பாலான முடிவுகளுக்கு முன்னுரையாகி விடுவதே அவர்களின் செயலற்ற மக்கள் மீது அன்பு இல்லாத தேச அபிமானம் இல்லாததே காட்டுவதாகவே அமைகிறது." கருப்பு பணம் -ஊழல் ஒழிப்பேன்,நாட்டு மக்கள் வங்கி கணக்குகளில் 15 லட்சம் சேமிப்பேன்" என்ற இமாலய வாண வேடிக்கைகளே காட்டி வந்து ஆட்சி அமைத்த பாசிச பா.ஐ.க அரசு உள்ளபடி பூசுவான வெடி அளவு கூட வெற்றி பெறவில்லை என்பதற்கு மேக்-இன்-இந்தியா,கங்கை தூய்மையாக்கல், தூய்மை இந்தியா,100 நாள்கள் விவசாயிகள் ஊர்வலம்,பல வடிவ ஆர்ப்பாட்டம்,சிறுநீர்,மலம் உண்டும்,நீர்வாண போராட்டம் நடத்தியும் கூட விவசாயிகளை காணாத அவர்கள் குறைகளை கேட்க கூடாத பிரதமர் மோடி என்பதற்கு இவை எல்லாம் சான்றுகள்..பாசிச பா.ஐ.க ,ஆர்.எஸ்.எஸ் கையாட்டி மோடி அரசு செய்த மாபெரும் வரலாற்று பிழை நவம்பர் -8-2016 மோடி அரசு அறிவித்த சாதராண மனிதன் மீது வலுக்காட்டாயமாக திணிக்கப்பட்ட பொருளாதார தாக்குதலான " பணமதிப்பு இழப்பு கொள்கை" .இக்கொள்கை ஏற்கனவே பல நாடுகளால் அறிவிக்கப்பட்டு தோற்றுப்போன கொள்கை பம வல்லரசு நாடுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் சூடுகண்ட பூணையாக அனுபவம் பெற்ற வரலாறு உண்டு.திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னதும் நினைவுக்கு வருகிறது "Operation success but patient death" என பணமதிப்பிழப்பை கடுமையாக சாடினார்.    
இப்பணமதிப்பிழப்பு ஏற்கனவே இந்தியாவில்  1978 இல் உயர் மதிப்பு கொண்ட 10000, 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து தோல்வி கண்ட கொள்கை.இக்கொள்கை தோற்றம் 1873 இல் அமெரிக்காவில் " வெள்ளி பணமதிப்பிழப்பு " அறிவிக்கப்பட்டு 1878 இல் மீண்டும் வெள்ளி பணம் செல்லும் என அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தோல்வி அடைந்த ஒன்று.அதன் பின்னர் 1983 இல் ஆப்ரிக்க நாடான கானாவில்,1984 நிகரகுவாவில்,1987 மியான்மர்,1991 சோவியத் ரஷ்யாவில் ,1993-ஆப்ரிக்க நாடுகள்,1996 -ஆஸ்திரேலிய அரசாங்கம்,2002 -ஐரோப்பாவின் 12 ஒருங்கிணைந்து அறிவித்து தோல்வி,2010 இல் வடகொரியா,2015 இல் ஐம்பாப்வே என பல நாடுகள் தோல்வி கண்ட ஒன்றை ,இதனை அறிவித்தால் தோல்வியே வரும் என்று அறிந்த ஒன்றை ஆட்சி உள்ளது என்ற தைரியத்தில் சர்வாதிகார மோடி அரசு அறிவித்து தோல்வியும் நாட்டிற்கு தேசிய அவமானமும்,இந்திய மக்கள் மீது தீணிக்கப்பட்ட பெரிய திருட்டாகவும் முன்பு இந்திரா காந்தியின் கட்டாய குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு சமம் எனகிறார்கள் வல்லுநர்கள்.
பணமதிப்பிழப்பு பற்றி ரிசர்வ் வங்கி கூறியதை எடுத்துக் காட்டினாலே இத்திட்டத்தின் தோல்வி புரியும்.உங்களுக்கு ரிசர்வ் வங்கியின் அண்டறிக்கை இதுவே " நாட்டின் 1544000 கோடி மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களில் 1528000(99.3%) கோடி திரும்ப வங்கிவந்துவிட்டது.இதில் கருப்பு பணமாக கருதிக் கொள்ள வேண்டிய தொகை 16000 கோடி.இதே நேரம் புதிய நோட்டுகள் அச்சடிக்க 8000 கோடியும் மற்றும் புதிய ரூபாய் தாள்களுக்கு ஏற்ப இயந்திரங்களை சீர் செய்ய 35000 கோடி செலவு என 430000 கோடி செலவு செய்து 16000 கோடி வருமானம் ஈட்டி தோற்றுப் போனது மோடி அரசு .செலவு 3 மடங்கு வரவோ 1 மடங்கு என தோல்வி அடைந்த பா.ஐ.க வின் திட்டத்தை வெளிச்சமிட்டு காட்டியது ரிசர்வ் வங்கி"
பணமதிப்பிழப்பால் மொத்த உள்நாட்டு தரம் (GDP) 6.1% ஆக இருந்து  அடுத்த காலாண்டில் 5.7% ஆக சரிந்தது.1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு,குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டது,லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இழப்பு,நூற்றுக்கும் மேற்பட்ட மக்களின் உயிர் இழப்பு,ஒட்டு மொத்த இந்தியாவும் மோடிக்கு ஓட்டு போட்டதால் 2000 ரூபாய்காக வங்கி வாசலில் சீனப் பெருஞ்சுவர் போல் நிற்க வைத்த கொடுமை,இதே நேரத்தில் பா.ஐ.க கட்சிக்கு பெரும் முதலாளிகள் கருப்பை வெள்ளையாக்க வழங்கிய நன்கொடைகள் எல்லாம் நாடு அறிந்ததே " மேய்கின்ற மாட்டை நக்குகின்ற மாடு கெடுத்த கதை ஆனாது.இந்திய நாட்டின் வளர்ச்சி 10 ஆண்டு பின்நோக்கி சென்றது.
இவற்றை எல்லாம் மறைக்கு படேலுக்கு (சீனாவிலிருந்து-மேக்-இன்-இந்தியா திட்டம் தோல்வி) சிலை,இராமனுக்கு சிலை, காடுகளை,வனவிலங்குகளை அழித்து சிவனுக்கு சிலை என மக்களை பக்தியால் தன் செய்த கொடூர ஆட்சியை மக்களிடம் மறைக்கப்பார்க்கிறது.இவை எல்லாம் நம் நாட்டில் மீண்டும் தொடராது இருக்க மதவாத கட்சிகளை ஐனநாயக நம் நாட்டில் கால்சூவடு படாமல் தூக்கி எறிவோம்.மதசார்பற்ற தன்மை கொண்ட அரசை உருவாக்கி நம் ஐனநாயகத்தைக் காப்போம்.

No comments:

Post a Comment