Sunday, November 25, 2018

நிழல்

நிழலும் நடுங்கும்!
பச்சிளமாய் மனமும்,சிந்தனையும்,செயலும்
உடல் உரமும்
முன்னோர் தந்த மூட வழக்கமும்
கண்முடி ஏற்றுக் கொள்ளும்
சாதி,மத தீ எண்ணங்கள்
நிழலாய் உள்ளத்தில் உள்ள வரை. .

நம் நிழலும் நடுக்கம் தரும் !
பிறர்க்கு. .
கல்வி பயன் தரும் போது!
உழைப்பு உன்னதம் பெறும் போது!

நம் நிழலும் உயர்வு தரும்!
கூடிய நட்பு உண்மையாய் உள்ள வரை!
கொண்ட கொள்கை பின்வாங்காது வாழ்கையில்் . .

நிழல் ஒளி சார்ந்தல்ல . .மனதின் பார்வையில் . .
கொண்ட மனித மனம் சர்ந்தது.
தீயோன் நிழல் தீது!
நல்லோன் நிழல்!
காய்ச்சி வாட்டும் பாலைவனத்தில்
பயன்தரும் மர நிழல்!

-இரா.முத்து கணேஷ்

No comments:

Post a Comment