ரிங்காரமிட்டு சுற்றிடும்
குருவியிடம் காலை
பேசி சிரித்துவிட்டு
என் மொழி தமிழென
சொல்லத்தான் நினைக்கிறேன் .
என் குரல் கேட்டு வந்தாய் !
வலசை போதலால்
நகரம் நாடு கடந்து
வாழுமினம் நீ !!!
ஏன் கேள்வி கேட்டு ?
கோபம் கொள்வாயோ !
உங்கள் மொழிபிரிவினையை
எங்களுக்குள்ளும் கடத்துகிறாயா ?
எங்களுக்குள் மொழியில் லை !
பேதமில்லை! சாதியில்லை!
சண்டையில்லை! சுறுசுறுப்பாய்
வாழ தெரியும் !
அன்றாட தேவை தேடி
வாழ தெரியும்!
சேமிப்பு கிடையாது!
அதனாலே எங்களுள்
திருட்டு கிடையாது!
நீ என்னிடம் பதில் கேள்வி கேட்டால்
என் முகம் கொண்டு
நான் எங்கு வைப்பேன் !!