உன்னில் இருக்கும் உன்னை . .
உலகுக்கு பேரறிவாய்..
ஒப்புரவாளனாய் . .
மேதையாய் . .
சமூகம் போற்றும் அறிஞனாய் . .
பண்டிதனாய் . .
புகழ் மனக்கும் உம் குலகொழுந்தாய் . .
இப்புவியில் பெருமை பெற்று. .
நீ வாழ !
காகிதம் என எண்ணாது ;
உன் ஆயுதம் என்று நித்தம்
பெரும் பசியோடும் . .
பெரும் தேடலோடும் . .
பெரும் ஆர்வத்தோடும்
..
நீந்தும் உன் வாசிப்பை பெருக்கு . .
அறிவை கூட்டு. .
இயலாது என்ற மனோபாவத்தை கழி !
நற்பாதை வகு !
வகுத்த வழி நடந்து !
பழுத்த மரம்போல் செல்வம் சேர் !
உனக்கு போக ஊருக்கு கொஞ்சம் கோடு . .
மக்கள் நல் இதயத்தில் இடம் பெறு . .
புகழ் சிலை வேண்டாம். .
உலகில் நீ யார் என தெரியும்படி வாழு !!
போகும் போது புகழோடு செல் !
அதற்கு கல்வியே உன் கை . .
புரட்டு புத்தகங்களை !
அறிவை விரிவு செய் !!
மனிதனாய் வாழ் !!!
No comments:
Post a Comment