உடைத்தெறி விலங்கை
நேர்பட நடந்திட . .
மலர்ந்து சிந்தித்திட . .
மகிழ்ந்து சிரித்திட . . உடைத்தெறி " நான் " எனும் விலங்கை
சுடர்மிகு மாணவரே ! சிறப்புமிகு மாணவரே ! மேன்மைமிகு இளைஞரே ! உடைத்தெறி நானெனும்
விலங்கை
நம்மில் உயர்வு தாழ்வு இல்லை !
வர்ண பேதம் இல்லை ! நான்கு வர்ணம் இல்லை ! மேல்கீழ் இல்லை ! ஆண்டான் இல்லை !அடிமை இல்லை !
ஆண் பெண் பேதமில்லை ! பாலின பாகுபாடு இல்லை ! பார்க்கக் கூடாதவன் இல்லை ! தீண்டத்தகாதவன் இல்லை !
தீட்டு பட்டவன் இல்லை ! உடைத்தெறி " சாதி " எனும் இலங்கை
நல்ல காலம் இல்லை !
ராகு காலம் இல்லை !
துயர்தரும் காலமில்லை !
கஷ்ட காலம் இல்லை ! உடைத்தெறி "சகுனம்" எனும் விலங்கை
நான்கு திசையும் நல்ல திசை !
விலங்குகள் நம் நண்பர் ! யாகம் வேண்டாம் !
தட்சனை வேண்டாம் ! உடைத்தெறி " மத சடங்கு " எனும் விலங்கை
மனித நேயத்தால் மதவெறி விலங்கு உடைப்போம் ! சமவாய்ப்பால் சமூக அநீதி விலங்கு உடைப்போம் !
மொழிகள் எல்லாம் சமம் என்போம் !
தாய் மொழியை போற்றி வளர்ப்போம்!
தாய் மொழியாம் தமிழ் மொழியை போற்றி வளர்ப்போம் !
திணிக்கப்படும் இந்தியை ! நுழைக்கப்படும் சமஸ்கிருதத்தை உடைத்து எறிவோம் !
ஈரோட்டுப் பாதை பெண்ணுரிமை பாதை ! ஈரோடு பாதை சமூக நீதி பாதை !
ஈரோட்டுப் பாதை சம உரிமை பாதை!
ஈரோட்டுப் பாதை பேதமில்லா பாதை!
ஈரோடு பாதை வழி நடந்து ! நம்மை பிற்போக்கும் சக்திகளை முறியடிப்போம்!
வாழ்க பெரியார் !
வளர்க பகுத்தறிவு !
- இரா.முத்து கணேசு
No comments:
Post a Comment