காவி கட்டியவனும் வாழ்ரான்
கட்சிக்கரை கட்டியவனும் வாழ்ரான்
கத்தி எடுத்தவன் கூட வாழ்ரான்
கலப்பை எடுத்தவன்
எப்படா? வாழ்வான்
Wednesday, October 5, 2016
Monday, October 3, 2016
வெள்ளை
மனம் வெள்ளை என்றால் தலைவன்
முகம் வெள்ளை என்றால் அழகன்
உடை வெள்ளை என்றால் முக்கிய நபர்
மயிர் வெள்ளை என்றால் மட்டும் கிழவனா?
சரணம்
வழிவிடு முருகனை வணங்கி சென்றேன்
வழிப்பறியானது
வாயில் எறினேன் காவல்நிலையம்
கொள்ளையடிக்கப்பட்டது கிடைத்தது
காவல்துறையே சரணம்
வந்தது
வீடு கட்டினேன் வாடகை தந்தது
கரண்ட் அக்கவுண்டில் பணம் கட்டினேன்
வட்டி தந்தது
பள்ளி,கல்லூரி கட்டணம் கட்டினேன்
வறுமை தந்தது
Sunday, October 2, 2016
அக்டோபர்2
உழைச்ச காசு நிறைஞ்சு பொங்க
இன்னும் காசு வேனுமின்னு துடிக்கிறோம் நாங்க!
ஒரு கவுன்சிலரு ஆனாலே!
கதவ துறக்க ஆள தோடுரோம் நாங்க!
பத்து ருபாய் தந்தாலும்
கூட்டம் கூட்டி பெருமை தேடுரோம் நாங்க!
அடப்பாவி மனுசா காந்தி , காமராசா
உன்ன போல உன்ன போல வாழமுடியாது
இந்த பூமியில லேசா?
-இரா.முத்துகணேசன்
Subscribe to:
Posts (Atom)