Tuesday, April 30, 2024

பாரதிதாசன் பிறந்தநாள் கவிதை

அழகிய குளிர்ச்சியும்! ஆழ்ந்த அறிவும்! நிறைந்த கருத்தாழமும்! புசிப்போரை வசிக்கும் திறனும்! வழிகாட்டும் ஒளி வெளிச்சமும் !
அவர் எழுத்தில் உண்டு . ..

பக்தர்களை புத்தராக்கும் உம் கவிதை! 
கோழையை வீரனாக்கும் உம் கவிதை! 
கருத்து புதையல் உம் கவிதை! 
கொள்கை விளக்கம் உம் கவிதை! மாணவரை முனைவராக்கும் உம் கவிதை! 

நம் தமிழ் நம் தமிழ் என்றாய்! 
நற்றமிழ் மனம் கமலம் தேன் என்றாய்! 
 நாற்றிசை தமிழால் வென்றாய்! 
நால் வர்ணம் தீதென்றாய்! நாமக்கெல்லாம் பகுத்தறிவு காவல் என்றாய்! 


பார் கொண்டாடும் பாவலரே! 
சீர்மிகு ஈரோட்டு சிப்பாயே! 
முத்தமிழ் ஆண்ட கோவே! 
சித்திரை வந்தபோதெல்லாம் உன் நித்திரை கவிதைதான்
தை ஒன்று தமிழ் புத்தாண்டு என போர் முரசு கொட்டும்! 

காணாத கடவுளைச் சாடி !
சாத்திரக் குப்பையை அகற்றி! 
பெண்ணடிமை போக்கி !
சமூகநீதி போற்றும்  உம் கவிதை !


உம் கவிதை வாசித்து புத்துலகை! புது பார்வையோடு பார்க்கிறோம். . 

பாரதிதாசனார் கவிதை !
புத்துலகப் பாதை! படிப்போம்! படைப்போம்! ஆதிக்கமற்ற உலகம்! 

நன்றி !
வணக்கம்! 

-இரா முத்து கணேசு

Sunday, April 14, 2024

ஆற்றல்

சிறைபட்ட அறைகுள்ளும்
அளவில்லா ஆற்றல் பெற்றவன் மனிதன்!

Sunday, March 10, 2024

புரட்சி பூக்கள்

புரட்சி பூக்கள் மலரட்டும் !
புதிய சிந்தனை பிறக்கட்டும் !
சீரிய எண்ணங்கள் தோன்றட்டும்! 
சிறந்த பாதைகளை நோக்கி கால்கள் நடக்கட்டும் .

நாம் நடக்கும் பாதையில் .
சாதிகள் நசுங்கட்டும். 
பிறவி வேதம் ஒழியட்டும் .
சமத்துவ பாதையை உருவாக்குவோம்! 

அறிவு எனும் ஆயுதமே !
அறியாமை நீக்கும். அறிஞர் அம்பேத்கரும் ,தந்தை பெரியாரும் !
சமுதாய வாழ்வுக்கு இரு கண்கள். 

கண்களே! இதயத்திடம் சொல். 
 சமத்துவம் பக்கம் நிற்கச் சொல். அனைவரும் சமம் என்று வாழச்சொல். ஆதிக்கம் மற்ற சமூகம் உருவாகும் .

Sunday, July 30, 2023

தலைவர் கலைஞர் 100

உலக தமிழ்ச்சங்கம் , மதுரை மற்றும் பொற்கைப்பாண்டியன் கவிதா மண்டலம் நடத்திய கலைஞர் 100 கவிஞர் 100 சிறப்புக் கவியரங்கில் எனது கவிதை

மாமதுரை அவையே! 
தித்திக்கும் தேனே ! கரும்பே !
உன்னை வணங்கி .
உன் மண் நின்று! 
உலகத்தமிழ் காவலன் புகழ் பாடுகிறேன் !
தமிழ் அன்னையே! தமிழ் காவலன் யார் என்கிறாயா? 
உன் புதல்வன் பற்றி நீ அறியாததா? அவையில் இருக்கும் சான்றோர் மக்கள் அறியாததா ? 
பிறகு ஏன் என்கிறாயா? 
பைய  நாவசைத்து. 
உலக தொடக்கம் தொட்டே . .
பிறந்து வளர்ந்து சிறந்து. .
இலக்கணங்களால் வேரூன்றி! இலக்கியங்களால் மனம் பரப்பி! இசையால் என்றும் வாழும் எங்கள் தமிழ் அல்ல அல்ல. .
நம் தமிழ் மொழியை பாழ்படுத்த எப்போதும் முயன்று தோற்க்கிறதே. ஆரியம் !
அது சமஸ்கிருதம் என்றும் !
இந்தி என்றும் !
கடையில் விலையாகாத பழைய சரக்கை !
சுவையில்லா அம்மொழியை! 
என் தமிழ் மொழியிலிருந்து பிறந்திட்ட அம்மொழி ! 
 நான்தான் முதல் என்றும் .
என் தமிழ் மொழி சிறப்பு இல்லை என்றும் சூது செய்கிறது. 
துணைக்கு ஆரியம் உள்ளது. .
கண்கலங்கி நின்றால் நம் தமிழ்தாய்! உனக்கு நான் இருக்கிறேன் என்று. .
கள்ளக்கூடி  நாயகன் பிடித்த பேனா. .

கருத்து மழை!கவி மழை! 
கொட்டும் பேனா . .
கொட்டிய  மழையில் ரோமாபுரிப் பாண்டியர்கள் பிறந்தார்கள். 

தமிழ் காக்க தொல்காப்பிய பூங்கா பிறந்தது..
தமிழுக்கு அரனாய் . .

தமிழ் சுவையே உலகிற்கு ஊட்டி!  திராவிட உணர்வை தட்டி எழுப்பி! இந்திக்கு எதிராய் . .
தமிழ் காக்கும் தளபதியாய் நின்று. 

தமிழுக்கு மன்றங்கள்
தமிழ் கலைஞர்களின் படைப்புகள் நாட்டுடைமை. 
பள்ளி எங்கும் தமிழ் கட்டாயம் . .
தமிழ் படித்தோர்க்கு பணிகளில் முன்னுரிமை தந்த தென்னாட்டு சிற்பி!!

நவீன தமிழகத்தின் தந்தை! !
தந்தை பெரியாரின் கொள்கை வாரிசு !!
அண்ணாவின் அரசியல் வாரிசு!!
என்றும் எப்போதும் தமிழுக்காய் வாழந்து. .

நம் நெஞ்சமெல்லாம் கரைந்து ஒவ்வொரு திசுவிலும்  வாழ்ந்து கொண்டிருக்கும் .

நம் தமிழ் உலகக் காவலர்! 

தாய்க்கு பெருமை சேர்த்த தங்கமகன் ஆம் தாயே !
உமக்கு பெருமை சேர்த்த தங்கமகன். 

திராவிடர்களின் தந்தை தமிழ்நாட்டு வளர்ச்சியின் நாயகன் .

செம்மொழி காவலன் சமச்சீர் கல்வி நாயகன் .

நம் தலைவர் கலைஞர் புகழ் பாடி!!புகழ் பரப்பி என்றும் தமிழ் காப்போம்!!
தமிழ்தாயை வணங்கி நன்றி!!வணக்கம்!! தமிழ அவைக்கு. . 

Sunday, October 16, 2022

ஓடுவது யார்?

ஓடுவது யார்? 

நிலைத்த வளமிகு மரமா? 

திட உலோக பேருந்தா? 

கந்தகம் உண்ட ரப்பரா? 

சிறையுண்ட கடிகாரமா? 

நிலைத்து அமர்ந்து

காலம் வீண் செய்யும் உன்னை விட்டு உன் நேரம் உன்னை துரத்தி ஒடுது. .

- இரா .முத்து கணேசு

Wednesday, July 27, 2022

கலைஞரின் பேனா

கலைஞரின் பேனா

 தமிழே வாழ்க! தலைவா வாழ்க! 

திராவிட முதல்வா வாழ்க !

பிற்போக்கு இருள் அகற்றிய கதிரோனே வாழ்க !

சூத்திரர்க்கு மேன்மை தந்த கோவே வாழ்க! 

தமிழுக்கு ஒன்று எனின் " அறவழி " கழகம் செய்வாய்! 

தமிழர் வாழ்வு வளர 
" அறிவு வழி " திட்டங்கள் செய்வாய்! 
மேன்மைகள் மட்டும் நாங்கள் பெற புரட்சிகள் பல செய்தாய் !

தமிழ்நாடு இந்தியாவின் முதல் என்றாய் !

 சொன்னபடி தமிழ்நாட்டை வளர்த்து தந்தாய்! 

திரைகடல் ஓடி திரவியம் தேட வேண்டாம் !!

திரவியம் தமிழகம் வர நல்ல பல தொழில்களை தமிழகம் கொண்டு வந்தாய் !!

ஈரோட்டு தந்தை போல் !!

காஞ்சியின் அண்ணன் போல்!!

தமிழுக்கும், தமிழர்க்கும் மேன்மை பல செய்தாய் !!

ஆரியம் செய்த சூழ்ச்சிகளை அதிரடியாய் வெல்பவரே !!

இளைய சமுதாயம் எழுகவே  இளமை முதலே உழைத்தவரே!!

ஆறு மாத கடுங்காவல் என்றாலும் ஆட்சி என்றாலும் சமம்தான் உமக்கு!!

ஒரே ரத்தம் திராவிட ரத்தம் என்றாய்!!

ஓர் இயக்கம் ஓர் தலைவன் கொண்டாய் !!!

உலகம் வியக்க வள்ளுவரை அறிமுகம் செய்தவரே!!

சக்கரவர்த்தி திருமகனே!!நெஞ்சுக்கு நீதியே!!

நூல்கள் பல படைத்தாய் தமிழுக்கு அறுசுவையாய். .

உடன்பிறப்பு கடிதம் பல குவித்தாய் தொண்டர்கள் நெறி வழுவா நடக்க.  .


 கண்டனம் கண்ணியமாய் செய்தாய் ஆட்சி குறையின்றி நடக்க. .

அதிகாலை தொட்டு கார்மேகம் முட்டும் வரை எழுதி . எழுதி. 

தமிழ்நாட்டை செதுக்கிய "பேனா"

 எங்கள் தலைவர் மு .க


-இரா. முத்து கணேசு
இராசபாளையம்

anbu17ganesh@gmail.com

Thursday, June 30, 2022

ஞாயிறு போற்றுதும்

         ஞாயிறு போற்றுதும்

பலன் கருது இல்லை ! மக்கள் நலன் கருதி !
இளம் பருவம் தொட்டு ! மக்களோடு மக்களாய் ! தோழனோடு தோழனாய் !
 கவிஞனாய் !
 கலைஞனாய் ! எழுத்தாளனாய் ! பேச்சாளனாய் !
அய்யா பெரியார் சீடனாய் ! அண்ணாவின் தம்பியாய் ! உடன்பிறப்பாய் !
 களம் பலகண்டு !
 பூமாலை  ! வசை மாலை !
 புகழ் மாலை ! அடி மாலை !
 எம்மாலை வந்திடும் 
உவகையோடு ஏற்று !

 அடக்கு முறையை அலையாய் ஏற்று !
உருகி ! ஒளியை ஊற்றாய் !
 பலனை நீர் ஊற்றாய் !
 தமிழ்நாடு எங்கும் தந்தாயே தலைவா !
 உலக மெச்சுகிறது திராவிட மாடலை!

 எல்லோருக்கும் தெரியும் சூத்திரதாரி நீர் என்று . .
 உம்மை வசை பாடிய பலர் நினைவிலும் இல்லை . .
 என்றும் எதிரிக்கு சிம்ம சொப்பனமாய் . .
ஏழைக்கு பயன் தரும் மரமாய் !
உம் சிந்தனையும்!
 செயலும்! 
உழைப்பும் நிலைத்து உள்ளது !

 பட்ட அடிகளை மூலதனமாக்கி கொட்டித் தந்தாய் இன்பம் பாமரருக்கு வட்டியாய் .  .


சமத்துவபுரம் சாதி ஒழிக்கிறது !
உழவர் சந்தை வறுமை ஒலிக்கிறது!
 சமச்சீர் கல்வி பிற்போக்கு ஒலிக்கிறது! மகிழ்கிறது
 மகிழ்கிறது செம்மொழி உம்மால்.  .

 தாயை முன்னிறுத்திய தலையனால் . .

 அரியணை ஏறி செருக்கு கொள்வோர் காலத்தில் . .

 மொழிக் காய்!
 இணத்துக்காய் ! அரியணை துறந்தது நீர்தானே . .

 உம் போல் மக்கள் வறுமை ஒழித்தது யார்?
 கிராமந்தோறும் வளர்ச்சியை கொண்டு சேர்த்தது யார்?
 தெளிந்த சிந்தனையால் நீர் தீட்டிய திட்டங்கள்!
 தொலைநோக்காயிருக்கிறது . .
மானமிகு சுயமரியாதைக்காரரே!
 மாசற்ற பொதுநலவாதியே!
 மாண்புமிகு முதல்வரே!
 நிலைத்த ஞாயிறே!
மனம் திறந்து நினைக்கிறோம் !
இன்னும் உங்கள் குரல் கேட்க துடிக்கிறோம்!
 பயன் கருதி போற்றவில்லை !
பயன் தரும் கருத்தியலை!
 திராவிடரை உயர்த்தும் கொள்கை கொண்டு உழைத்த தலைவனே! ஞாயிறே போற்றுதும்! போற்றுதும்!

இரா. முத்து கணேசு