Sunday, December 21, 2014

உயர்த்தி பிடிப்போம் ! திராவிட கொள்கையை!

தமிழகம் பல கலை.இந்திய நாகரிகத்தின் வெளிப்பாடான மாநிலம் , இம்மாநிலத்தில் உயர்வுக்கு காராணம் தமிழகத்தில் தந்தை பெரியாரால் கட்டுப்பாடோடு வளர்க்கப்பட்டுள்ள திராவிட கொள்கைகளே !
குலக்கல்வியை ஓழித்தது முதல் பெண் உரிமை , முடநம்பிக்கையை ஒழித்ததன் விளைவே ! இன்று நாம் வருணசிரம வளைத்தில் நாம் அகப்பாடமால் நம் தமிழ் மக்களை காக்கும் அரண் . தந்தை பெரியார் தொடங்கிய பகுத்தறிவு தீயை பெரியார் வழியே நின்று அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், பேராசிரியர் , ஐயா.வீரமணி , ஐயா.சுப.வீ , என எண்ணற்ற கொள்கையாளர்களால்  இந்த " தீப்பந்தம் " உயர்த்தி பிடிக்கப்பட்டதன் விளைவே அதன் பகுத்தறிவு ஒளியில் நாம் தலை உயர்த்தி , நெஞ்சை நிமிர்த்தி , மூட நம்பிக்கை பரப்பிட்ட கயவரோடு சமமாய் , அத்துணை ஜாதினரும், மதத்தினரும் ஒன்று கூடி " தமிழன் " என்ற ஒற்றை முகவரில் நாம் முல காரணம் திராவிட கொள்கையே !
இம்முகவரியை மாற்ற எத்துணை சதிகள் பின்னப்படுகிறது என்பது நம் கண்ணுக்கு பின்னால் நடக்கும் வித்தை , ஆட்சி மொழியாக்க இந்தி திணிக்க
" இந்து துவ "  கொள்கையாளர்கள் நிலை உயர்ந்துள்ள காரணமாக முயற்சிகள் முழுவேகத்தில் நடைபெறுவதையையும் அதை நம்மை போல் திராவிட கொள்கையாளர்களால் ஒடுக்கப்படுவதையும் நாம் நாளும் கண்டு கொண்டுதான் உள்ளம் , " இருகை தட்டினால் தானே ஓசை " வரும் . ஆனால் நம்மில் எத்துணை பேர் கை தட்ட ஒன்று படுகிறோம் ? மதவாத சக்திகள் ஒன்று பட்டு நம்மை ஆட்சி செய்ய பெரிய முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது அதில் ஒன்று தான் " தாய் மதத்திற்கு திரும்புவோம் " என அதிகார வர்க்கம் சர்வ பலத்தோடு மக்களை பல உபயம் (மிரட்டல்) தந்து இந்து மதத்திற்கு திருப்புவது . 
அதுமட்டுமா? அமித்ஷா தமிழக வருகையையும் இந்த வழி பின்பற்றலே!
இந்த முயற்சி 1900 ஆண்டு முதலே தொடர்ந்து நடக்கிறது , இம்முயற்சி திராவிடர் கழகம் , திமுக எடுத்த சிரிய பணிகளாலும் , திராவிட கொள்கையாலும் முறியடிக்கப்பட்டு வருகிறது இதன் விளைவால் தான் தமிழகத்தில் திமுக மக்கள் கட்சியாக அங்கிகரிக்கப்பட்டு உள்ளது. இதனை குறைக்கவே கழகம் மீது முட்டை,முட்டையாக சேர்த்து ஊழல் குற்றம் கூறி மக்கள் மனதில் விஷம் கலக்கப்படுகிறது.
இந்த முட்டைகள் கூட விரைவில் நியாயப்படி போலி என்று உடையும் காலம் விரைவில் வரும். பதவிக்கு , பணம் சேர்க்க நம்மில் இணைந்த கூட்டம் ஒடும் , ஆனால் திராவிட கொள்கை, மாநில சுயாட்சி, இந்தி எதிர்ப்பு , முட நம்பிக்கை எதிர்ப்பை  பின்பற்றும் நம் போன்ற உண்மை தொண்டர்கள் உள்ள வரை எவர் வந்தாலும். திராவிட கொள்கைக்கே வெற்றி !

Monday, December 15, 2014

இனமான பேராசிரியர்

டிசம்பர் மாதம் என்றதும் " டிசம்பர் " பூக்கள் தான் பலர் நினைவுக்கு வரும். அனால் தமிழர்க்கோ ! அதைவிட பெருமையோடு கூற வேண்டுமானால் திராவிட மொழி உணர்வை கொண்டோர்க்கு 19 டிசம்பர் என்றதுமே ஐயா.இனமான பேராசிரியர்.க.அன்பழகன் அவர்கள் பிறந்தநாள்தான் சட்டென்று ஞாபகம் வரக்கூடும் . இப்படி நான் கூறியதை படிக்கும் இளைஞர்க்கு பேராசிரியர் என்ன செய்தார் என்று கேட்பாரே ? இளைஞர்களே ! சற்று இப்பதிவை படியுங்கள் . பேராசிரியர் வாழ்வை, அவர் தொண்டுகளை சூருக்கமாக தெரிந்து கொள்ளலாம். பேராசிரியர் 19  டிசம்பர் 1922 ஆம் அண்டு , தலைவர் கலைஞர் தற்போது சட்டப்பேரவை உறுப்பினாராக பணியாற்றி கொண்டு இருக்கும் திருவாரூரில் உள்ள "காட்டூர் "எனும் கிராமத்தில் எம்.கல்யாண சுந்தரனார் மற்றும் சுவர்ணம்மாள் மகனாக தமிழகத்தில் " சூரியகாந்தி " பூவாக பிறந்தார்.ஐயாவின் இயற்பெயர்
" இராமையா "  .இளமையிலேயே கல்வியிலும் , சமூக பற்றும் உடைய ஐயா அண்ணாமலை பல்கலைக்கழக முதுகலைமானித் தமிழ் பட்டத்தை 1946 இல் வெற்றிகாரமாக கற்றுணர்ந்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்தார். அப்போது இந்தி திணிப்பு அரங்கேறிய காலம் , நாடி வந்த இந்தி, தமிழ் மொழியை ஒழிக்க நிணைத்த காலம் , தமிழ் காக்க ஈரோட்டு சிங்கம் பொரியார் , அறிஞர்.அண்ணா , கலைஞர் என்ற தலைவர்களால் இந்தி ஒட காத்திருந்த காலம் . அப்போது தன்னையும் இந்தி போராட்டத்தில் இணைத்துக் கொண்டு  தமிழின மானம் , மொழி காக்க பேராசிரியரும் போராடினார். இவராது கம்பீர பேச்சு மாணவர்களை ஒன்றிணைத்தது என்று கூறினால் அது மிகையாகது . அப்போது இன்று வரை தலைவர் கலைஞரோடு மக்களுக்காக , தமிழ் மொழிக்காக போராடுபவர் பேராசிரியர். தி.மு.க ஆரம்பகாலம் முதல் முக்கிய பங்கு வகிப்பவர், 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக பணியாற்றி என்பதை விட மக்கள் இயக்கமாம் திமுக வை இரும்பு கோட்டையாக மாற்றியவர். ஐயா அவர்களின் பேச்சில் தமிழர் இனம் , சுயமரியாதை , தமிழர் வாழ்கின்ற நிலை கூறித்து அதிகம் இருப்பதால் கழகத்தாராலும் , மக்களாலும்
" பேராசிரியர் "  என அன்போடு அழைக்கப்படுகிறார்.
ஐயா. 1962 முதல் 1967 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1967 முதல் 1971 வரை நாடாளுமன்ற உறுப்பினாராகவும், 1971 ஆம் திமுக அரசின் சமூக நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 1984 ஆம் ஆண்டு  இலங்கை வாழ் மக்களின் தமிழ் ஈழக்கோரிக்கையை வழிமொழிந்து மக்கள் நலனுக்காக தன்னுடைடுய சட்ட மன்ற உறுப்பினார் பெறுப்பை ( பதவியை)
தலைவர் கலைஞரோடு துறந்தவர். அடுத்தாக நமது கழக ஆட்சியில் நிதி மற்றும் கல்வி அமைச்சராகவும் பணியாற்றியவர். சிறந்த எழுத்தாளர் இவர் எழுதிய சில புத்தகங்கள் தமிழர் திருமணமும் இனமானமும் , உரிமை வாழுது , தமிழ்கடல் , அலை ஓசை , விடுதலைக் கவிஞர் , இனமொழி வாழ்வுரிமைப் போர், தமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார் , தமிழனக் காவலர் கலைஞர் , நீங்களும் பேச்சாளர் ஆகாலம்  , தமிழ்கடல் அலை ஓசை பரவும் தமிழ்மாட்சி,  விவேகானந்தர் விழைத்த மனித தொண்டு , பல்கலைக்கழங்களில்  பேராசிரியர்கள். இன்னும் பல நூல்களையும் , கட்டுரைகளையும் பல சமுக கட்டுரைகளையும்
இயற்றியுள்ளார்.
மொழிக்கும், இன உணர்வுக்கு , இன வளர்ச்சிக்கும் பெறும் தொண்டாற்றி வரும் பேராசிரியர் என்றும் வாழும் வரலாறு. ஐயா.பிறந்தநாளோடு தமிழ் இன, மொழி காக்க நாமும் உறுதி ஏற்போம். பெருமையுடைய பேராசிரியர்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Saturday, December 13, 2014

பயத்தின் வெளிப்பாடு

மனித பயத்தின் வெளிப்பாடு ,
அதை பயன்படுத்த தெரிந்த மனிதனின்
குறியிடுதான்

சிறு கடை
பெரிய அங்காடியாக தெருக்கு தெரு முழைத்திற்க்கும்

சிறு தெய்வம்
பெரிய தெய்வம்.

Wednesday, December 10, 2014

நீயா இந்து ?

நான் ஒரு இந்து என்று பெருமை பேசும் பேரறிவாளர்களைக் கேட்கிறேன்.இந்துமதப் புராணங்களில் வரும் ஒரு கடவுளாவது கள்ளன் . கட்குடியன் , காமச்சேட்டைக்காரன் , பிறன் மனை விழைபவன் என்னும் கொடிய குற்றங்களைச் செய்யாதவராக இல்லையே ஏன் ?

- அறிஞர் அண்ணா.

" மை " விளையாட்டு

ஆமை
மூயலாமை
கல்லாமை
தீமை !

கொல்லாமை
புறங்கூறாமை
வாய்மை
வலிமை
வளமை
மேன்மை !

" மை " பன்புத்தொகை எனின்.

இம் " மை "
ஏம் " மை " ????

Wednesday, December 3, 2014

நல்லவை

மக்களுக்கு நல்ல உணவு , நல்ல உடை , நல்ல கல்வி , நல்ல சிந்தணை தருவதுதான் ஒரு நல்ல அரசாங்கத்தின் கடமை .நல்ல மதத்தின் குறிக்கோள்.நல்ல இலக்கியத்தின் இலட்சியம்.

Monday, December 1, 2014

அறனெனப்படுவது

அறமென்பது துறவறத்தால் விளைவதே என்பர் சிலர் .அது தவறு . அறனெனப்படுவது இல்வாழ்க்கை என்பதும் காண வேண்டும்.

காலை வணக்கம் உடன்பிறப்புகளே !

Sunday, November 30, 2014

மனம் ஒரு மியூசியம்

நம் மனம் மியூசியம் போன்றது.எது கொள்ளத்தக்கதோ அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.எது தள்ளத்தக்கதோ அதைத் தள்ளி விடுங்கள்.

காலை வணக்கம் உடன்பிறப்புகளே !

Thursday, November 27, 2014

உழைப்பு

உழைப்பே செல்வம் - உழைப்பார்க்கே உரிமையெல்லாம் உழைப்பாளிக்கே உலகம் உரியது.

காலை வணக்கம் தோழர்களே !

Tuesday, November 25, 2014

திமுக சாதணைகள்

திமுக தமிழகத்தில் என்ன செய்து கிழித்தது என கேட்ப்போர்க்கு சிறந்த பதில்
" மனிதரில் நீயும் மனிதன் மண் அன்று " என்று மக்களிடம் உணர்த்தியது மக்களின் அடிமை மனப்பான்மை , அடிமைத்தனத்தை ஒழித்தது திமுகவே !
சமத்துவம் , சகோதரத்துவம் நீதி கட்சி ,திராவிடர் கழகம் , தி.மு.கழகமின்றி அமைந்திரா ?

அப்போதைய நாட்டின் நடப்பு என்னவென்று தெரியுமா ?
1 . தீண்டத்தகாதவர் எனக் கருதப்பட்ட மக்கள் , மற்ற சாதிக்காரர்கள் வாழும் தெருக்களில் நடக்கக் கூடாது.
2 . முழங்காலுக்கு கீழே வேட்டி கட்டக் கூடாது.
3 . மேல் சாதியர் தெருக்களில் செருப்பு அணிந்து செல்லக் கூடாது.
4 . குடை பிடித்துச் செல்லக் கூடாது.
5 . மேல் துண்டு அணிந்து செல்லக் கூடாது.
6 . பெண்கள் ரவிக்கை அணியக் கூடாது.
7 . மண்குடத்தில்தான் நீர் கொள்ள வேண்டும்.
8 . உலோகப் பாத்திரங்கள் உபயோகிக்கக் கூடாது.
9 . அடிமைகளாகவே வேலை செய்ய வேண்டும்.
10 .சொந்தமாக நிலம் வைத்திருக்கக் கூடாது.
11 . திருமண நேரங்களில் கூட மேளம் வாசிக்கக் கூடாது.
12 . நிலம் குத்தகைக்கு வாங்கிச் சாகுபடி செய்ய கூடாது.
13 . குதிரை மீது ஊர்வலம் செல்லக் கூடாது.
14 . வண்டி மீதி ஏறிச் செல்லக் கூடாது.
15 . பொதுக்கிணற்றில் , குளத்தில் நீர் எடுக்கக் கூடாது.
16 . சுடுகாட்டுக்கு கூட தனிப்பாதையிலேயே செல்ல வேண்டும்.
17 . நீதிமன்றங்களில் குறிப்பிட்ட தூரத்துக்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும்.
18 . கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை.
19 . கோவில் கோபுரத்தைத்தான் வணங்க வேண்டும்.
20 . பள்ளிக்கூடங்களில் நுழைய இடமில்லை.
21 . பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதியில்லை.
22 . நாடகங்களில் , பொது நிகழ்ச்சிகளில் அனுமதி இல்லை.
23 . ஊர்களின் ஒதுக்குப்புறங்களில்தான் உழைக்கும் மக்கள் குடியிருப்புகள் அமைந்திருந்தன.
24 . அப்பகுதி மக்கள்
" சேரி மக்கள் " என இழிவுபடுத்தப்பட்டனர்.

இத்துணை சமுக அவலங்களை ஒழித்தது பெரியார் காட்டிய வழியிலும் , அண்ணாவின் கொள்கையாலும் , தலைவர் கலைஞர் அவர்களால் வழி நடத்தப்படும்
திமு கழகமே !

Monday, November 24, 2014

தந்தை பெரியார்

பெரியார் சொன்ன கொள்கை என்ன ?

1. ஒரே உலகம்
2. உலக மக்கள் எல்லாரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.
3. உலக சொத்துக்கள் , இன்ப துன்பங்கள் எல்லாம் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எல்லா மக்களுக்கும் பொதுவானது.
4 . ஒவ்வொருவரும் அவர்களது சக்திக்கு ஏற்றபடி உழைத்தாக வேண்டும்.
5, உள்ளதை ஒவ்வொருவரும் அவர்களது தேவைக்கு தகுந்தபடி அனுபவிக்கலாம்.
6 . இந்த உலகமும் , மக்கள் நலமும் , இன்பமும் தான் மக்களின் கவலையாக , நோக்கமாக இருக்க வேண்டும்.

அண்ணா பொன்மொழிகள்

அண்ணா பொன்மொழிகள்.

Tuesday, November 18, 2014

அண்ணாவும் நாமும்

சாதி முறைச் சடங்கு என்பனவெல்லாம் தந்திரமாக அமைக்கப்பட்ட பொருளாதாரச் சுரண்டல் திட்டமேயாகும்.ஆகவே சாதிமுறை ஓழிப்பதும் சமதா்மத் திட்டம்தான்.

காலை வணக்கம் உடன்பிறப்புகளே !