Wednesday, March 18, 2020

வெள்ளந்திச் சிரிப்பினிலே

வெள்ளந்திச் சிரிப்பினிலே . .
உலகம் இயங்குதம்மா..

உன் கைக்கும் வியர்வைக்கும் மந்திரசக்தி
இருக்கும்மா. .

மனிதன் கால்பட்டால்
புல்தரையும் கட்டாந்தரை
ஆகுதம்மா. .

உன் கால்பட்டு வெற்றுநிலமும் காய் கனி தந்து உலகுக்கு தாய் ஆகுதம்மா . .

உலகம் மறந்த தெய்வமே !!

உம் உழைப்பாலே எம் பசி போகுது. . .

நன்றி கடன் தீர்க்க
உன் மகனாய் பிறப்பேன் அம்மா. ‌.

- இரா.முத்து கணேஷ்
ஆசிரியர்
கோவில்பட்டி

Tuesday, March 17, 2020

புதுயுகம் படைப்போம்

புத்தக சோலையில் நீராடி !
கவிதைகளால் பாச்சூடி !
இலக்கண இலக்கியங்களால் பூச்சூடி !
புதுயுகம் படைப்போம்.

உழைத்து காக்கும் உழவரும் !
நாணயமாய் வாழும் பாட்டாளியும் !
குயவரும் நெசவரும் !
காப்பாளியும் கல்வியாளரும் !
மதிப்பு காண புதுயுகம் படைப்போம்.

நித்தம் கண்விழித்து !
உடல் வருத்தி உழைத்து !
சேர்த்த பொருள் காத்து !
மகிழ்வும் உடல்வளமும் பூத்து !
சுரண்டி வாழ்வோர் வெறுத்து !
புதுயுகம் படைப்போம்.

மூடபோதனை ஒழித்து !
சாதி பேதம் எரித்து !
உழைப்பை மதித்து !
அறிவை வளர்த்து !
அகந்தை துரத்து !
பட்டறிவோடு பகுத்தறிவு சேர்த்து !
அன்பால் புதுயுகம் படைப்போம்.

- இரா.முத்து கணேஷ்
ஆசிரியர்
கோவில்பட்டி.

Saturday, March 7, 2020

மகளிர் தினம்

வேந்தனையும் !
உயிர் கொண்ட உலகையும்!
படைத்து!

நான் என்ற அடக்குமுறையால்
அடக்கப்பட்ட போதும் !

பெருந்தன்மையால் !
குறுகி !
பேரண்பால் இல்லம் பெறுகி !

ஞாயிற்றை மறந்து !
தன் சுற்றம் துறந்து !
செல்லுமிடம் சொர்க்கமாக்கும் ஞாயிறு !

மேலாண்மை அவள் சிறப்பு !
தன் வயிற்றை மறந்து
பிள்ளை பசி போக்கும் அமுதசுரபி!

பூட்டியாய் !
பாட்டியாய் !
தாயாய் !
சகோதரியாய் !
மகளாய் !

இல்லம் காக்கும்
காவல் தெய்வங்களுக்கு
மகளிர் தின வாழ்த்துகள்!

இரா.முத்து கணேஷ்
முதுகலை வேதியியல்ஆசிரியர்
நாடார் மேல்நிலைப் பள்ளி
கோவில்பட்டி