Sunday, October 16, 2022

ஓடுவது யார்?

ஓடுவது யார்? 

நிலைத்த வளமிகு மரமா? 

திட உலோக பேருந்தா? 

கந்தகம் உண்ட ரப்பரா? 

சிறையுண்ட கடிகாரமா? 

நிலைத்து அமர்ந்து

காலம் வீண் செய்யும் உன்னை விட்டு உன் நேரம் உன்னை துரத்தி ஒடுது. .

- இரா .முத்து கணேசு

Wednesday, July 27, 2022

கலைஞரின் பேனா

கலைஞரின் பேனா

 தமிழே வாழ்க! தலைவா வாழ்க! 

திராவிட முதல்வா வாழ்க !

பிற்போக்கு இருள் அகற்றிய கதிரோனே வாழ்க !

சூத்திரர்க்கு மேன்மை தந்த கோவே வாழ்க! 

தமிழுக்கு ஒன்று எனின் " அறவழி " கழகம் செய்வாய்! 

தமிழர் வாழ்வு வளர 
" அறிவு வழி " திட்டங்கள் செய்வாய்! 
மேன்மைகள் மட்டும் நாங்கள் பெற புரட்சிகள் பல செய்தாய் !

தமிழ்நாடு இந்தியாவின் முதல் என்றாய் !

 சொன்னபடி தமிழ்நாட்டை வளர்த்து தந்தாய்! 

திரைகடல் ஓடி திரவியம் தேட வேண்டாம் !!

திரவியம் தமிழகம் வர நல்ல பல தொழில்களை தமிழகம் கொண்டு வந்தாய் !!

ஈரோட்டு தந்தை போல் !!

காஞ்சியின் அண்ணன் போல்!!

தமிழுக்கும், தமிழர்க்கும் மேன்மை பல செய்தாய் !!

ஆரியம் செய்த சூழ்ச்சிகளை அதிரடியாய் வெல்பவரே !!

இளைய சமுதாயம் எழுகவே  இளமை முதலே உழைத்தவரே!!

ஆறு மாத கடுங்காவல் என்றாலும் ஆட்சி என்றாலும் சமம்தான் உமக்கு!!

ஒரே ரத்தம் திராவிட ரத்தம் என்றாய்!!

ஓர் இயக்கம் ஓர் தலைவன் கொண்டாய் !!!

உலகம் வியக்க வள்ளுவரை அறிமுகம் செய்தவரே!!

சக்கரவர்த்தி திருமகனே!!நெஞ்சுக்கு நீதியே!!

நூல்கள் பல படைத்தாய் தமிழுக்கு அறுசுவையாய். .

உடன்பிறப்பு கடிதம் பல குவித்தாய் தொண்டர்கள் நெறி வழுவா நடக்க.  .


 கண்டனம் கண்ணியமாய் செய்தாய் ஆட்சி குறையின்றி நடக்க. .

அதிகாலை தொட்டு கார்மேகம் முட்டும் வரை எழுதி . எழுதி. 

தமிழ்நாட்டை செதுக்கிய "பேனா"

 எங்கள் தலைவர் மு .க


-இரா. முத்து கணேசு
இராசபாளையம்

anbu17ganesh@gmail.com

Thursday, June 30, 2022

ஞாயிறு போற்றுதும்

         ஞாயிறு போற்றுதும்

பலன் கருது இல்லை ! மக்கள் நலன் கருதி !
இளம் பருவம் தொட்டு ! மக்களோடு மக்களாய் ! தோழனோடு தோழனாய் !
 கவிஞனாய் !
 கலைஞனாய் ! எழுத்தாளனாய் ! பேச்சாளனாய் !
அய்யா பெரியார் சீடனாய் ! அண்ணாவின் தம்பியாய் ! உடன்பிறப்பாய் !
 களம் பலகண்டு !
 பூமாலை  ! வசை மாலை !
 புகழ் மாலை ! அடி மாலை !
 எம்மாலை வந்திடும் 
உவகையோடு ஏற்று !

 அடக்கு முறையை அலையாய் ஏற்று !
உருகி ! ஒளியை ஊற்றாய் !
 பலனை நீர் ஊற்றாய் !
 தமிழ்நாடு எங்கும் தந்தாயே தலைவா !
 உலக மெச்சுகிறது திராவிட மாடலை!

 எல்லோருக்கும் தெரியும் சூத்திரதாரி நீர் என்று . .
 உம்மை வசை பாடிய பலர் நினைவிலும் இல்லை . .
 என்றும் எதிரிக்கு சிம்ம சொப்பனமாய் . .
ஏழைக்கு பயன் தரும் மரமாய் !
உம் சிந்தனையும்!
 செயலும்! 
உழைப்பும் நிலைத்து உள்ளது !

 பட்ட அடிகளை மூலதனமாக்கி கொட்டித் தந்தாய் இன்பம் பாமரருக்கு வட்டியாய் .  .


சமத்துவபுரம் சாதி ஒழிக்கிறது !
உழவர் சந்தை வறுமை ஒலிக்கிறது!
 சமச்சீர் கல்வி பிற்போக்கு ஒலிக்கிறது! மகிழ்கிறது
 மகிழ்கிறது செம்மொழி உம்மால்.  .

 தாயை முன்னிறுத்திய தலையனால் . .

 அரியணை ஏறி செருக்கு கொள்வோர் காலத்தில் . .

 மொழிக் காய்!
 இணத்துக்காய் ! அரியணை துறந்தது நீர்தானே . .

 உம் போல் மக்கள் வறுமை ஒழித்தது யார்?
 கிராமந்தோறும் வளர்ச்சியை கொண்டு சேர்த்தது யார்?
 தெளிந்த சிந்தனையால் நீர் தீட்டிய திட்டங்கள்!
 தொலைநோக்காயிருக்கிறது . .
மானமிகு சுயமரியாதைக்காரரே!
 மாசற்ற பொதுநலவாதியே!
 மாண்புமிகு முதல்வரே!
 நிலைத்த ஞாயிறே!
மனம் திறந்து நினைக்கிறோம் !
இன்னும் உங்கள் குரல் கேட்க துடிக்கிறோம்!
 பயன் கருதி போற்றவில்லை !
பயன் தரும் கருத்தியலை!
 திராவிடரை உயர்த்தும் கொள்கை கொண்டு உழைத்த தலைவனே! ஞாயிறே போற்றுதும்! போற்றுதும்!

இரா. முத்து கணேசு

Tuesday, June 28, 2022

உடைத்தெறி விலங்கை!

உடைத்தெறி விலங்கை

நேர்பட நடந்திட .  .
 மலர்ந்து சிந்தித்திட . .
 மகிழ்ந்து சிரித்திட .  . உடைத்தெறி  " நான் " எனும் விலங்கை

சுடர்மிகு மாணவரே ! சிறப்புமிகு மாணவரே ! மேன்மைமிகு இளைஞரே ! உடைத்தெறி நானெனும் 
விலங்கை

நம்மில் உயர்வு தாழ்வு இல்லை !
வர்ண பேதம் இல்லை ! நான்கு வர்ணம் இல்லை ! மேல்கீழ் இல்லை ! ஆண்டான் இல்லை !அடிமை இல்லை !
ஆண் பெண் பேதமில்லை ! பாலின பாகுபாடு இல்லை ! பார்க்கக் கூடாதவன் இல்லை !  தீண்டத்தகாதவன் இல்லை !
தீட்டு பட்டவன் இல்லை ! உடைத்தெறி " சாதி " எனும் இலங்கை

நல்ல காலம் இல்லை !
 ராகு காலம் இல்லை !
துயர்தரும் காலமில்லை !
 கஷ்ட காலம் இல்லை ! உடைத்தெறி "சகுனம்" எனும் விலங்கை

நான்கு திசையும் நல்ல திசை !
விலங்குகள் நம் நண்பர் ! யாகம் வேண்டாம் !
தட்சனை வேண்டாம் ! உடைத்தெறி " மத சடங்கு " எனும் விலங்கை

மனித நேயத்தால் மதவெறி விலங்கு உடைப்போம் ! சமவாய்ப்பால் சமூக அநீதி விலங்கு உடைப்போம் !

மொழிகள் எல்லாம் சமம் என்போம் !
தாய் மொழியை போற்றி வளர்ப்போம்!
 தாய் மொழியாம் தமிழ் மொழியை போற்றி வளர்ப்போம் !
 திணிக்கப்படும் இந்தியை ! நுழைக்கப்படும் சமஸ்கிருதத்தை உடைத்து எறிவோம் !

ஈரோட்டுப் பாதை பெண்ணுரிமை பாதை ! ஈரோடு பாதை சமூக நீதி பாதை !
ஈரோட்டுப் பாதை சம உரிமை பாதை!
 ஈரோட்டுப் பாதை பேதமில்லா பாதை!
 ஈரோடு பாதை வழி நடந்து ! நம்மை பிற்போக்கும் சக்திகளை முறியடிப்போம்!
 வாழ்க பெரியார் !
வளர்க பகுத்தறிவு !

- இரா.முத்து கணேசு

Monday, May 30, 2022

காலமெல்லாம் கலைஞர்

தந்தை பெரியார் வகுத்த சமூக நீதிப் பாதையில் ! 
அறிஞர் அண்ணாவின் சமஉரிமை அரசியல் வழியில் . .
மாவட்டம் எங்கும் மருத்துவக்கல்லூரியாய்!
இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாடே தொழிலிலும், மருத்துவத்திலும் முதலாய் .  . 
காலமெல்லாம் கலைஞர்!!

கடித இலக்கணமாய்! புதினங்களை புதுமையாய். தொல்காப்பிய பூங்காவாய்! தமிழுக்கு செம்மொழி தந்தவராய் !
காலமெல்லாம் கலைஞர்!!

மக்களிடம் தகவல் தெரிவிக்கும் தொலைக்காட்சியாய்!!
சமத்துவம் படைத்த சமத்துவபுரமாய்!!
உழவு செழிக்க செய்த உழவர் சந்தையாய்!!அமுது படைக்கும் திருக்குறள் உரையாய்!!
காலமெல்லாம் கலைஞர் . .

இனிக்கும் கவிதையாய்! மணக்கும் எழுத்தால்! சிறக்கும் பேச்சால்! வியக்கும் சிந்தனையால் !காலமெல்லாம் கலைஞர் .  .


வள்ளுவர் கோட்டமாய்! வான்புகழ் வள்ளுவர் சிலையாய்!!ஆரியத்தை வென்ற சாணக்கியராய்!!கல்வியறிவை மக்களிடம் சேர்ந்த தமிழ் செம்மலாய்!!உடன்பிறப்பே எனும் ஒற்றைச் சொல்லால் மனம் கவர்ந்த காந்தமாய்! 
காலமெல்லாம் கலைஞர் .  


பெயருக்கு திட்டமில்லை 
பெயர் சொல்லும் திட்டங்களாய்!!மக்களைக் கவர திட்டமில்லை மக்களை உயர்த்தவே திட்டம் என்றும் !!காலமெல்லாம் கலைஞர். .

நிலைத்த புகழாய் நீர் இருக்கிறீர் !!
சமநீதியாய், சமூகநீதியாய் நீர் இருக்கிறீர் !!
கருப்பு,சிவப்பு,நீலம் கலக்கும் மையமாய் நீர் இருக்கிறீர் !!திராவிட நெருப்பு ஊட்டும் குரலாய் நீர் இருக்கிறீர் !!
உதய சூரியனே !!அறிஞர் அண்ணாவின் தம்பியே !!
தந்தை பெரியாரின் மதிசுரப்பே !!
தமிழ் உள்ளவரை !!தமிழர் உள்ளவரை!!காலமெல்லாம் கலைஞர். . 


- இரா .முத்து கணேசு