Wednesday, October 5, 2016

கூச்சம்

உண்ட சோற்றுக்கு உண்மையாகும் மக்கள்
உண்ண சோறுதந்த உழவனுக்கு உதவ கூசுவது ஏன்?
ஏங்கே இலக்கண பிழை.

Monday, October 3, 2016

வெள்ளை

மனம் வெள்ளை என்றால் தலைவன்
முகம் வெள்ளை என்றால் அழகன்
உடை வெள்ளை என்றால் முக்கிய நபர்
மயிர் வெள்ளை என்றால் மட்டும் கிழவனா?

சரணம்

வழிவிடு முருகனை வணங்கி சென்றேன்
வழிப்பறியானது
வாயில் எறினேன் காவல்நிலையம்
கொள்ளையடிக்கப்பட்டது கிடைத்தது
காவல்துறையே சரணம்

வந்தது

வீடு கட்டினேன் வாடகை தந்தது
கரண்ட் அக்கவுண்டில் பணம் கட்டினேன்
வட்டி தந்தது
பள்ளி,கல்லூரி கட்டணம் கட்டினேன்
வறுமை தந்தது

Sunday, October 2, 2016

வளர்ச்சி

தள்ளி வைத்தவன்
சேர்த்து கொண்டான்.

-பொருள் வந்ததும்

அக்டோபர்2

உழைச்ச காசு நிறைஞ்சு பொங்க
இன்னும் காசு வேனுமின்னு துடிக்கிறோம் நாங்க!

ஒரு கவுன்சிலரு ஆனாலே!
கதவ துறக்க ஆள தோடுரோம்  நாங்க!

பத்து ருபாய் தந்தாலும்
கூட்டம் கூட்டி பெருமை தேடுரோம் நாங்க!

அடப்பாவி மனுசா காந்தி , காமராசா
உன்ன போல உன்ன போல வாழமுடியாது
இந்த பூமியில லேசா?

-இரா.முத்துகணேசன்

Friday, September 30, 2016

ஆதங்கம்

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மனமுன்டு என்றோமே?

நாம் மனித குலத்தில் மலர்ந்த முன்றாம் பாலினம் மனமற்று கருகுதே?

தெரு சண்டைக்கு நாட்டாமை நாம்.
நம் பாலின சண்டைக்கு நாட்டமை யார்?

அண், பெண் பேதமில்லை என்றோம்
முன்றாம் பாலினத்தை ஏனோ? பேதம் செய்து பிரித்து வைத்தோம்.

சமபலம்,சமகுணம்,சமஅறிவு கொண்ட பாலிணம் சாபம்பட்டு ரயில்பேட்டியில் பிச்சைஎடுப்பது குற்றமே.

அவர்களை வாய்பை தட்டிப் பறித்த , தர மறுக்கும் நாமும் திருடனே!

படைப்பில் குற்றம்  செய்து படைத்தவரை காக்க மறந்த இல்லாத கல்லே உன்னை கண்டிக்க நீதிமன்றம் தேவை.
உன் துரோகம் மறந்து உன்னை காண உன்கோலம் தரித்து பிச்சை கேட்ட அந்த திருநங்கை .
மனம் கொதிக்குது எரிமலையாய்.
சமூகமோ இருக்கு சாணி தட்டிய குப்பை தொட்டியாய். .

பிச்சைதந்த நல்லவர்களே என் திருநங்கைக்கு வேலை கோடு. .
மரியாதை கோடு. .