Wednesday, April 29, 2020

தாய்மை

இரத்தம் சிந்தி நாடுகாத்த
மறவனுக்கு நடுகல் நம் வரலாறு!

காப்பு செங்கீரை தாலம் சப்பாணி
முத்து வருகை அம்புலியில்
பொதுவாகி அம்மானை நீராடல் ஊசலில்
மாதுவாகி மண்வாசனை காத்து
குலம் காத்து மணந்தாள் !

நற்குணமாது நீர்வாகியானாள்
மழலையாய் இருந்தவாள் மழலை சுமக்கிறாள்!

உண்பாள் உள்ளிருக்கும் உயிர் துப்பும்
வாந்தி ! தலைசுற்றல் ! முதுகுவலி
அரசனோ ? அரசியோ ? என மகிழ்ந்து வலி ஏற்பாள்.

அந்நாள் வந்தது வைரம் ஈன்றாள்
அவள் உயிர்காத்த உதிரத்தையும்
மரண வாசல் சென்ற நங்கை
மழலை கண்டு மன்னுலகம் கண்டாள்.

மங்கையே உமக்கு நடுகல் பெருமையன்றோ?

ஆனால் நீ விரும்பியது

தாய்மை எனும் இனிமை

Monday, April 27, 2020

கழனி

உப்பு தண்ணீர் உதிரம் சேர்த்து

விலையில்லா உழைப்பை கைமாறு

பாராது கொடுத்து தூக்கம் மறந்து

வளர்த்தேன் ; விற்றேன்

கழனி மலடானாது வியாபாரி

செல்வந்தர் நானோ பொருளிள்ளார்

பொருளிள்ளார்

நடுநிலை மறந்த ஊடகம்

தன்நிலை மறந்த வேந்தன்

அருள் மறந்த அணங்கு

வாசிப்பை மறந்த கல்வியாளர்

தேசபக்தி மறந்த வீரன்

தொண்டு மறந்த ஊழியன்

பொருளிள்ளார் வாழ தகுதியில்லார்.

Saturday, April 25, 2020

விண்ணப்பம்

உன் விழியில் கைதானேன் !

அகத்தில் சிறைபட்டது போதும் !

அறமாய் இல்லறம் இணைவோம் .

இனி பிரிவு ஏது ?

ஞாலம் வாழும் கதிரோன் நிலவும்

நாம் ஆவோம் ! விண்ணப்பம் ஏற்றிடு !

முப்போழுதும் அறுசுவை கலந்த வாழ்வு வாழ்வோம் . . . .

Friday, April 24, 2020

அறம்

நற்செயல் செய்தலும்
நன்நெறி நடத்தலும்
குறள் படித்தலும்
மகிழ்வோடு வாழ்தலும்
சுற்றம் நிறைவாய் சேர்த்தலும்
பிறர் உயர்வு கண்டு புழுங்காதலும்
அறம் ! நல்வாழ்வு !

Tuesday, April 14, 2020

வீட்டில் 21

*வீட்டில் 21*

ஆறறிவு என்ற கர்வம்
ஓர் அறிவு தொடுத்த போரில்
யானைக்கும் அடிசறுக்கும் என புரிந்தோம்!

தனித்திருந்த வீடுகள் !
குவிந்திருந்த மணித்துளிகள் !
இல்லம் நிறைந்த பாசமழைகள் !

காவலாய் நின்றது ! சாதியல்ல !
காவல் சுகாதார மருத்துவ தெய்வங்கள் !

எறும்புகள் கற்றுத் தந்த சேமிப்பை
தவறாய் புரிந்து
பதுக்கினர் நுகர்பொருள்
உயர்த்தினர் விலை !
ஏழை வயிற்றை சுரண்டி
சேர்த்தார் பொருள் !
அவன் உண்பதும் உணவுதானே!
கொல்லை விலை விற்று
கொரோனா விட
பெரும் கிருமியானான். .

தப்பி பிழைக்க
வீட்டில் இருப்போம் தம்பி !

இன்றைய தேவை பொருளல்ல உயிர் !
நமது தலைமுறை.

*இரா.முத்து கணேஷ்*
*முதுகலை வேதியியல்ஆசிரியர்*
*நாடார் மேல்நிலைப் பள்ளி*
*கோவில்பட்டி*

புலனம் -9944468677