Wednesday, March 18, 2020

வெள்ளந்திச் சிரிப்பினிலே

வெள்ளந்திச் சிரிப்பினிலே . .
உலகம் இயங்குதம்மா..

உன் கைக்கும் வியர்வைக்கும் மந்திரசக்தி
இருக்கும்மா. .

மனிதன் கால்பட்டால்
புல்தரையும் கட்டாந்தரை
ஆகுதம்மா. .

உன் கால்பட்டு வெற்றுநிலமும் காய் கனி தந்து உலகுக்கு தாய் ஆகுதம்மா . .

உலகம் மறந்த தெய்வமே !!

உம் உழைப்பாலே எம் பசி போகுது. . .

நன்றி கடன் தீர்க்க
உன் மகனாய் பிறப்பேன் அம்மா. ‌.

- இரா.முத்து கணேஷ்
ஆசிரியர்
கோவில்பட்டி

Tuesday, March 17, 2020

புதுயுகம் படைப்போம்

புத்தக சோலையில் நீராடி !
கவிதைகளால் பாச்சூடி !
இலக்கண இலக்கியங்களால் பூச்சூடி !
புதுயுகம் படைப்போம்.

உழைத்து காக்கும் உழவரும் !
நாணயமாய் வாழும் பாட்டாளியும் !
குயவரும் நெசவரும் !
காப்பாளியும் கல்வியாளரும் !
மதிப்பு காண புதுயுகம் படைப்போம்.

நித்தம் கண்விழித்து !
உடல் வருத்தி உழைத்து !
சேர்த்த பொருள் காத்து !
மகிழ்வும் உடல்வளமும் பூத்து !
சுரண்டி வாழ்வோர் வெறுத்து !
புதுயுகம் படைப்போம்.

மூடபோதனை ஒழித்து !
சாதி பேதம் எரித்து !
உழைப்பை மதித்து !
அறிவை வளர்த்து !
அகந்தை துரத்து !
பட்டறிவோடு பகுத்தறிவு சேர்த்து !
அன்பால் புதுயுகம் படைப்போம்.

- இரா.முத்து கணேஷ்
ஆசிரியர்
கோவில்பட்டி.

Saturday, March 7, 2020

மகளிர் தினம்

வேந்தனையும் !
உயிர் கொண்ட உலகையும்!
படைத்து!

நான் என்ற அடக்குமுறையால்
அடக்கப்பட்ட போதும் !

பெருந்தன்மையால் !
குறுகி !
பேரண்பால் இல்லம் பெறுகி !

ஞாயிற்றை மறந்து !
தன் சுற்றம் துறந்து !
செல்லுமிடம் சொர்க்கமாக்கும் ஞாயிறு !

மேலாண்மை அவள் சிறப்பு !
தன் வயிற்றை மறந்து
பிள்ளை பசி போக்கும் அமுதசுரபி!

பூட்டியாய் !
பாட்டியாய் !
தாயாய் !
சகோதரியாய் !
மகளாய் !

இல்லம் காக்கும்
காவல் தெய்வங்களுக்கு
மகளிர் தின வாழ்த்துகள்!

இரா.முத்து கணேஷ்
முதுகலை வேதியியல்ஆசிரியர்
நாடார் மேல்நிலைப் பள்ளி
கோவில்பட்டி

Thursday, February 27, 2020

எழுக தமிழ்

வையம் கடந்து
வானம் பறந்து
மொழிகளில் சிறந்து
மக்களை கவர்ந்து
எழுக தமிழ் !

எளியோர் தமிழ்
எங்கள் தமிழ்
காலமும் தமிழ்
பாலமும் தமிழ்
ஞாலமும் தமிழ்
எழுக தமிழ் !!

கருத்து குவியல்
அறங்களின் புதையல்
புகழின் சமையல்
நவரசத்தின் அவியல்
எங்கள் தமிழ்
எழுக தமிழ் !!!

கற்க இனிது
பேச எளிது
உறவாடிட தூது
அறிஞர்க்கு அமுது
எங்கள் தமிழ்
தாய்மை தமிழ்
வாய்மை தமிழ்
மேன்மை தமிழ்
என்றும் தமிழ்
எழுக தமிழ் !!!!

-இரா.முத்து கணேஷ் M.sc B.ED
முதுகலை வேதியியல் ஆசிரியர்
நாடார் மேல்நிலைப் பள்ளி
கோவில்பட்டி
புலனம்-9944468677

Tuesday, September 24, 2019

குருதி கொடை


ஓர் அறிவு தோன்றி !
ஐந்தறிவு வந்தன எல்லாம் !
செல்லா இல்லம்.

கல்லுக்குள் நீராய் !
சொல்லுக்குள் நேராய் !
தலைமுறை தாண்டி வாழும் வெல்லம்!

வெள்ளத்தால் கொல்லாது !
பெரும் போரால் கோழையாகாது.
நிலநடுக்கத்தால்  நடுக்காது!
வாழும் கொடை!!

நிறம் ! நிலம் ! பேதம் !
சாதி ! மத ! சாக்கடை உடைத்து !
நிலைத்த சமூகநிதி
சான் அளவும் தனக்காய் வாழாது!
வாழும் "குருதி கொடை "

Wednesday, January 23, 2019

இரு நாக்கு நல்லோர்

தினசரி நாள்காட்டி !
நேரம் முடிந்து கிழிகிறது!
கழிகிறது காலம்!
கழிகிறது நேரம் !
மீண்டும் ! மீண்டும் !
உதயம் தொடங்கினும்!
கவலை மட்டும் போகலையே!
உறிக்கும் வெங்காயமாய் !
பயனிற்றி !
பலனிற்று !
பழுக்காத காய்யாய் !
கசக்கும் காய்யாய்!
இரு நாக்கு நல்லோரால்
நடக்குது வாழ்வு!

Tuesday, January 22, 2019

மகள் அதிகாரம்

காந்தத்தின் ஈர்ப்பு விசை . .
உள்ளது உன் குரலில். .
எட்டு எடுத்து வைக்கவில்லை
கொள்ளை அடிக்கிறாய் எங்கள் மனதை. .
மொழி விளங்கா உன் பேச்சில்
அந்த தேன் சிரிப்பில். .
பறக்குது சோகம் எல்லாம். .
எந்தன் அந்தாதியை தொடரும் உயிர் பொருளே!
நீ உறங்கு!
கண் முடி உறங்கையில் முறிக்கும் சோம்பல்!
எட்டாம் அதிசயம்!
பல் இல்லா முகத்தின் சிரிப்பு!
மகிழ்வின் மாத்தாப்பு!
மகளே !
ஞாயிற்றுகாய் காத்திருக்கிறேன்
உனை காண!
கண்டு அழுது கலக்காதே!
சிரித்து என் காயம் சிர் செய்!