Thursday, October 20, 2016

விசித்திர பிறவிகள்

"விசித்திர பிறவிகள்"

கவுதமன்- மாட்டுக்கு பிறந்தானாம்!கவு என்றால் மாடு.அதனால் மாட்டுக்கு பிறந்தவன் ஆனான்.

சுனகன்- நாய்க்கு பிறந்தானாம் சுனகன்.சுனகன் என்றால் நாய் .அதனால் நாய்க்குப் பிறந்தவன் சுனகன் ஆனான்.

மாண்டவியன்- தவளைக்கு பிறந்தானாம்! மண்டூகம் என்றால் தவளை .அதனால் தவளைக்கு பிறந்தவன் மண்டூகன் ஆனான்.

அஸ்வத்தாமன்- குதிரைக்கு பிறந்தானாம்! அஸ்வம் என்றால் குதிரை .அதனால் குதிரைக்குப் பிறந்தவன் அஸ்வத்தாமன் ஆனான்.

காங்கியன்- கழுதைக்கு பிறந்தானாம்! காங்கு என்றால் கழுதை(என்று ஓர் அர்த்தம் உண்டு) அதனால் கழுதைக்குப் பிறந்தவன் காங்கியன் ஆனான்.

மச்சகந்தி - மீனுக்குப் பிறந்தவள்! மச்சம் என்றால் மீன்.அதனால் மீனுக்கு பிறந்தவள் மச்சகந்தி ஆனாளாம்! இந்தப்படியாக மிருகாதி ஐந்துக்களுக்கும் மக்கள் பிறக்கிறார்கள் என்றால், விஞ்ஞான அறிவுக்கும்,மதத்துக்கும் சம்பந்தமே வேண்டியதில்லை என்பது மத முடிவா? இது மாத்திரமா?

நரகாசுரன்- பன்றிக்கு பிறந்தானாம்! பன்றி  நரகலைத் தின்பதால் நரகசுரன் என்கிற பெயர் வந்தது போலும்!

அய்யனார்- சிவனுக்கும்,
விஷ்ணுவுக்கும் பிறந்தவன் அய்யனார்.இரண்டு பேரும் ஆண்கள்.இவர்களுக்குப் பிறந்ததால் அய்யன் ஆனான் போலும்!

இது என்ன நியாயம்?
இது எப்படி பொருந்தும்?
இதற்கு என்ன காரணம் சொல்லுவது?
நமக்கு ஒன்றுமே புரியவில்லையே?

#தந்தைபெரியார்

விடுதலை-02/08/1948

No comments:

Post a Comment