உன் விழியில் கைதானேன் !
அகத்தில் சிறைபட்டது போதும் !
அறமாய் இல்லறம் இணைவோம் .
இனி பிரிவு ஏது ?
ஞாலம் வாழும் கதிரோன் நிலவும்
நாம் ஆவோம் ! விண்ணப்பம் ஏற்றிடு !
முப்போழுதும் அறுசுவை கலந்த வாழ்வு வாழ்வோம் . . . .
உன் விழியில் கைதானேன் !
அகத்தில் சிறைபட்டது போதும் !
அறமாய் இல்லறம் இணைவோம் .
இனி பிரிவு ஏது ?
ஞாலம் வாழும் கதிரோன் நிலவும்
நாம் ஆவோம் ! விண்ணப்பம் ஏற்றிடு !
முப்போழுதும் அறுசுவை கலந்த வாழ்வு வாழ்வோம் . . . .
நற்செயல் செய்தலும்
நன்நெறி நடத்தலும்
குறள் படித்தலும்
மகிழ்வோடு வாழ்தலும்
சுற்றம் நிறைவாய் சேர்த்தலும்
பிறர் உயர்வு கண்டு புழுங்காதலும்
அறம் ! நல்வாழ்வு !
*வீட்டில் 21*
ஆறறிவு என்ற கர்வம்
ஓர் அறிவு தொடுத்த போரில்
யானைக்கும் அடிசறுக்கும் என புரிந்தோம்!
தனித்திருந்த வீடுகள் !
குவிந்திருந்த மணித்துளிகள் !
இல்லம் நிறைந்த பாசமழைகள் !
காவலாய் நின்றது ! சாதியல்ல !
காவல் சுகாதார மருத்துவ தெய்வங்கள் !
எறும்புகள் கற்றுத் தந்த சேமிப்பை
தவறாய் புரிந்து
பதுக்கினர் நுகர்பொருள்
உயர்த்தினர் விலை !
ஏழை வயிற்றை சுரண்டி
சேர்த்தார் பொருள் !
அவன் உண்பதும் உணவுதானே!
கொல்லை விலை விற்று
கொரோனா விட
பெரும் கிருமியானான். .
தப்பி பிழைக்க
வீட்டில் இருப்போம் தம்பி !
இன்றைய தேவை பொருளல்ல உயிர் !
நமது தலைமுறை.
*இரா.முத்து கணேஷ்*
*முதுகலை வேதியியல்ஆசிரியர்*
*நாடார் மேல்நிலைப் பள்ளி*
*கோவில்பட்டி*
புலனம் -9944468677
வெள்ளந்திச் சிரிப்பினிலே . .
உலகம் இயங்குதம்மா..
உன் கைக்கும் வியர்வைக்கும் மந்திரசக்தி
இருக்கும்மா. .
மனிதன் கால்பட்டால்
புல்தரையும் கட்டாந்தரை
ஆகுதம்மா. .
உன் கால்பட்டு வெற்றுநிலமும் காய் கனி தந்து உலகுக்கு தாய் ஆகுதம்மா . .
உலகம் மறந்த தெய்வமே !!
உம் உழைப்பாலே எம் பசி போகுது. . .
நன்றி கடன் தீர்க்க
உன் மகனாய் பிறப்பேன் அம்மா. .
- இரா.முத்து கணேஷ்
ஆசிரியர்
கோவில்பட்டி
புத்தக சோலையில் நீராடி !
கவிதைகளால் பாச்சூடி !
இலக்கண இலக்கியங்களால் பூச்சூடி !
புதுயுகம் படைப்போம்.
உழைத்து காக்கும் உழவரும் !
நாணயமாய் வாழும் பாட்டாளியும் !
குயவரும் நெசவரும் !
காப்பாளியும் கல்வியாளரும் !
மதிப்பு காண புதுயுகம் படைப்போம்.
நித்தம் கண்விழித்து !
உடல் வருத்தி உழைத்து !
சேர்த்த பொருள் காத்து !
மகிழ்வும் உடல்வளமும் பூத்து !
சுரண்டி வாழ்வோர் வெறுத்து !
புதுயுகம் படைப்போம்.
மூடபோதனை ஒழித்து !
சாதி பேதம் எரித்து !
உழைப்பை மதித்து !
அறிவை வளர்த்து !
அகந்தை துரத்து !
பட்டறிவோடு பகுத்தறிவு சேர்த்து !
அன்பால் புதுயுகம் படைப்போம்.
- இரா.முத்து கணேஷ்
ஆசிரியர்
கோவில்பட்டி.
வேந்தனையும் !
உயிர் கொண்ட உலகையும்!
படைத்து!
நான் என்ற அடக்குமுறையால்
அடக்கப்பட்ட போதும் !
பெருந்தன்மையால் !
குறுகி !
பேரண்பால் இல்லம் பெறுகி !
ஞாயிற்றை மறந்து !
தன் சுற்றம் துறந்து !
செல்லுமிடம் சொர்க்கமாக்கும் ஞாயிறு !
மேலாண்மை அவள் சிறப்பு !
தன் வயிற்றை மறந்து
பிள்ளை பசி போக்கும் அமுதசுரபி!
பூட்டியாய் !
பாட்டியாய் !
தாயாய் !
சகோதரியாய் !
மகளாய் !
இல்லம் காக்கும்
காவல் தெய்வங்களுக்கு
மகளிர் தின வாழ்த்துகள்!
இரா.முத்து கணேஷ்
முதுகலை வேதியியல்ஆசிரியர்
நாடார் மேல்நிலைப் பள்ளி
கோவில்பட்டி
வையம் கடந்து
வானம் பறந்து
மொழிகளில் சிறந்து
மக்களை கவர்ந்து
எழுக தமிழ் !
எளியோர் தமிழ்
எங்கள் தமிழ்
காலமும் தமிழ்
பாலமும் தமிழ்
ஞாலமும் தமிழ்
எழுக தமிழ் !!
கருத்து குவியல்
அறங்களின் புதையல்
புகழின் சமையல்
நவரசத்தின் அவியல்
எங்கள் தமிழ்
எழுக தமிழ் !!!
கற்க இனிது
பேச எளிது
உறவாடிட தூது
அறிஞர்க்கு அமுது
எங்கள் தமிழ்
தாய்மை தமிழ்
வாய்மை தமிழ்
மேன்மை தமிழ்
என்றும் தமிழ்
எழுக தமிழ் !!!!
-இரா.முத்து கணேஷ் M.sc B.ED
முதுகலை வேதியியல் ஆசிரியர்
நாடார் மேல்நிலைப் பள்ளி
கோவில்பட்டி
புலனம்-9944468677