Wednesday, September 23, 2020

உலகை மாற்றும் திறனாளிகள்

உடல் உறுப்புகளே ஏமாற்றின !
ஆனால் இன்றும்
மனம் பரப்புகின்றான்
என் சகோதரன்
இல்லங்களில் ஊதுபத்தியாய்!

சுதா சந்திரனின் நாட்டியமாய் !

லுடுவிக்வான் பேத்தோவனின் இசையாய்!

ஸ்டீவன்வில்லியம் ஹாக்கிங்சின் விஞ்ஞானமாய் ! மெய்ஞானமாய் !

எடுத்துக்காட்டுகள் சில அல்ல . .

எடுத்துக் கொள்ளப்பட்டவர்களே சிலர் . ‌.

பட்டியல் நீளும்
பட்டியலிட்டால். ‌.

உடல்தான் சிறிது தடைபட்டது
ஊக்கத்திற்கு தடையில்லை . ‌.

உன் முயற்சிக்கு சிறையில்லை. ‌.

வினா என வாழ்வை எண்ணாதே !
விடியுமென முயன்றிடு
விடையே வெற்றி !!!

நீ ! சாதிக்கப்பிறந்தவன் என நினைத்தால் . ‌ ‌

Saturday, July 11, 2020

சாலையோரப் பூக்கள்

ஆடி மாசந்தானே! ஆட்டிப்படைக்கும்

நீத்தம் நூல் தாலியாய்!

எப்போது சாவுஎன நினைச்சிகிட்டே!

பொழுதும் விடியுது! பொழுதும் அடங்குது!

பாரி வந்து தேர் தருவானோ?

மயில்குளிர் தீர்த்த மன்னவன்தான்

வருவானோ? ரோட்டில் நூறைத்

தாண்டி வரும்காலனை கண்டதும்

நெஞ்சு துடிக்குது ! வேலைக்கு போகிற

ராமாயி கூட நடக்கும் போது!

ஏன் விரல உடைச்சுதானே போகுறா?

எனக்கு தண்ணி உற்ற வேணாம்!

மண்னை நம்பி வளர்ந்துகிறேன்!

மனுச பயலுகளா ? வாழவிடங்கய்யா!

சாலையோரப் பூக்கள்

Saturday, May 23, 2020

சொல்லத்தான் நினைக்கிறேன்

ரிங்காரமிட்டு சுற்றிடும்
குருவியிடம் காலை
பேசி சிரித்துவிட்டு
என் மொழி தமிழென
சொல்லத்தான் நினைக்கிறேன் .

என் குரல் கேட்டு வந்தாய் !
வலசை போதலால்
நகரம் நாடு கடந்து
வாழுமினம் நீ !!!
ஏன் கேள்வி கேட்டு ?

கோபம் கொள்வாயோ !
உங்கள் மொழிபிரிவினையை
எங்களுக்குள்ளும் கடத்துகிறாயா ?
எங்களுக்குள் மொழியில் லை !
பேதமில்லை! சாதியில்லை!

சண்டையில்லை! சுறுசுறுப்பாய்
வாழ தெரியும் !
அன்றாட தேவை தேடி
வாழ தெரியும்!
சேமிப்பு கிடையாது!

அதனாலே எங்களுள்
திருட்டு கிடையாது!
நீ என்னிடம் பதில் கேள்வி கேட்டால்
என் முகம் கொண்டு
நான் எங்கு வைப்பேன் !!

Friday, May 22, 2020

துரோகம்

வெற்றி ஒன்றே என !

மதி மறந்து !

நற்குணம் இழுத்து !

கல்விச்சிறப்பிழந்து !

இழி மனிதராய் நடந்து !

பாசம் இறந்து !

மேன்மை மறந்து !

வெற்றி எல்லாவற்றையும்

நியாயம் செய்யுமென !

குறுக்குவழி நடந்து !

துரோகம் செய்து !

துரோகி ஆகாதே !

அன்பால் கசிந்துருகி !

உன்னை தொலைத்து !

நறுமணமாய் மக்கள்

மனதே வசமாக்கு !

துரோகம் கொல்லும் !

Thursday, May 14, 2020

நம்பிக்கை


பெருங்கடல் படகு துடுப்போடு கரை சேர்தலும் !

கடும் குளிரில் எல்லையில்
படைவீரர்கள் நம்மை காத்தலும் !

பெற்றோர் மழலை தளிர்களை
ஆசானிடம் ஒப்படைத்தலும் !

தினம்தினம் விடியல்
இரவும் பகலும் சுழல்தலும் !

ஆறறிவு மனிதன் அன்றாட வாழ்வும்
அவன் கொண்ட நம்பிக்கையாலே !

நாமும் வெல்வோம்
காவல், சுகாதார, செவிலியர் படையோடு
கொல்வோம் கொரோனாவை !

Tuesday, May 12, 2020

வாழ்(கை) தேவை


உன்னில் இருக்கும் உன்னை . .

உலகுக்கு பேரறிவாய்..

ஒப்புரவாளனாய் . ‌.

மேதையாய் . ‌.

சமூகம் போற்றும் அறிஞனாய்‌ . .

பண்டிதனாய் . .

புகழ் மனக்கும் உம் குலகொழுந்தாய் . ‌.

இப்புவியில் பெருமை பெற்று. .

நீ வாழ !

காகிதம் என எண்ணாது ;

உன் ஆயுதம் என்று நித்தம்

பெரும் பசியோடும் . .
பெரும் தேடலோடும் . .
பெரும் ஆர்வத்தோடும்
..

நீந்தும் உன் வாசிப்பை பெருக்கு . .
அறிவை கூட்டு. .
இயலாது என்ற மனோபாவத்தை கழி !
நற்பாதை வகு !

வகுத்த வழி நடந்து !

பழுத்த மரம்போல் செல்வம் சேர் !

உனக்கு போக ஊருக்கு கொஞ்சம் கோடு . .

மக்கள் நல் இதயத்தில் இடம் பெறு . .

புகழ் சிலை வேண்டாம். .

உலகில் நீ யார் என தெரியும்படி வாழு !!

போகும் போது புகழோடு செல் !

அதற்கு கல்வியே உன் கை . .

புரட்டு புத்தகங்களை !

அறிவை விரிவு செய் !!

மனிதனாய் வாழ் !!!

Monday, May 11, 2020

மது

கல்,மலம், எடை சுமக்கும் தோழர்களும் !

வாகன சாரதியும் ! இன்னும் பலர்

உடல் வருத்தி வலி போக !

சோமபான அரக்கன் வசமாயினர் !

மனித மூளை சாயம் செய்த அரக்கன்

உயர்தட்டு பானம் "மது" என்றான்

தீமை இலகு செயல் !

எளிய செயல் அடிமையானது !

ஆறறிவு கூட்டம் ! விளைவு

அறம் ஒழிந்தது !

களவு கொலை பலித்தது

அரசே கடை திறந்தாலும்

மதுவிடம் ஒத்துழையாமை போராட்டம்

நடத்தி வெல்வோம் ! மானிட சமுத்திரமே !

Sunday, May 10, 2020

அன்னை

கண்டிப்பு  இராணுவம் போல் !

தாங்குவதில் பூமி போல் !

குடும்பங்களை தாங்கும் அடித்தளம்!

கருணையின் முகவரி !

தன் தேவை சுருக்கி !

குடும்ப வளம் பெருக்கி !

நம்மில் வாழும் தெய்வம் !

நாட்டையும் தாய் என்போம் !

ஏன் ?

தாய் என்றதுமே பாசம் வருவதாலே !

நமக்காக உழைப்பவர் தாய் !

எதிர்பார்ப்பு இல்லாதவர் தாயே !

தாயே ! நம் உலகம் !

மனதில் சுமப்போம் இறுதிவரை !

நம் வீட்டு ராணியை !

நம் தாயை !

முதியோர் இல்லம் வேண்டாம் !

நம் தாய் வாழும் வீடே நம் வீடாய் வேண்டும்.

Friday, May 1, 2020

மே தினம்

கடலால் சூழ்ந்து காடு பரந்த உலகை !

காடு திருத்தி ! நாடு திருத்தி !

வியர்வை உதிரம் சிந்தி !

மண்னை சோலையாக்கி !

மக்கள் செல்லும் பாதையும் !

பயணம் செல்லும் ஊர்தியும் !

உண்ணும் உணவும் !

உடுத்தும் கலிங்கமும் !

உழைப்பாளிகளின் கொடை !

உம் கைகளால் சுழலும் உலகம் !

நீ உழைப்பை மறந்தால் அகிலம் அரளும் !

உலகை இயக்கும் இயக்கத்திற்கு !

உள்ளம் கணிந்த நன்றி !

*மே தினம்* ! நம் தினம் !

நம்மவர்கள் தினம் !

பாவேந்தர் புகழ்மாலை

தாசனில்லை வாசன் தமிழ்வாசன் !

தேன் மதுர தமிழில் வாசம் செய்யும் கவி !

வயிற்று பிழைப்பிற்கு எழுதுவோர் மத்தியில் !

இன் உணர்ச்சி கவி பாடிய கவி நீர் !

பாசுரம் பாடிய தமிழை !

மொழி வளர்ச்சிக்கும் ! பகுத்தறிவு சிந்தனைக்கும் !

பாடிய கவி நீர் தானே!

சித்திரை பிறந்த போது எல்லாம் !

உம் கவிதை இளைஞர் ஆயுதமாய் !

தை ஒன்று தமிழ் புத்தாண்டு !

என இனமுரசு கொட்டும் !

உம் போல் இயற்கை கவி யார் ?

பெரியார் புகழ்ந்த கவி நீர்  !

தமிழ் நேசித்த மெய்கவி நீர் !

தமிழில் கவியால் அமிழ்து செய்தவர் நீர் !

பிறமொழி கலப்பை ஒழித்தவர் நீர் !

மானமுள்ள தமிழனே !

உலகின் இரண்டாம் பொதுமறை உம் கவிதை !

வாழிய திராவிடனே ! வாழ்க !

Wednesday, April 29, 2020

தாய்மை

இரத்தம் சிந்தி நாடுகாத்த
மறவனுக்கு நடுகல் நம் வரலாறு!

காப்பு செங்கீரை தாலம் சப்பாணி
முத்து வருகை அம்புலியில்
பொதுவாகி அம்மானை நீராடல் ஊசலில்
மாதுவாகி மண்வாசனை காத்து
குலம் காத்து மணந்தாள் !

நற்குணமாது நீர்வாகியானாள்
மழலையாய் இருந்தவாள் மழலை சுமக்கிறாள்!

உண்பாள் உள்ளிருக்கும் உயிர் துப்பும்
வாந்தி ! தலைசுற்றல் ! முதுகுவலி
அரசனோ ? அரசியோ ? என மகிழ்ந்து வலி ஏற்பாள்.

அந்நாள் வந்தது வைரம் ஈன்றாள்
அவள் உயிர்காத்த உதிரத்தையும்
மரண வாசல் சென்ற நங்கை
மழலை கண்டு மன்னுலகம் கண்டாள்.

மங்கையே உமக்கு நடுகல் பெருமையன்றோ?

ஆனால் நீ விரும்பியது

தாய்மை எனும் இனிமை

Monday, April 27, 2020

கழனி

உப்பு தண்ணீர் உதிரம் சேர்த்து

விலையில்லா உழைப்பை கைமாறு

பாராது கொடுத்து தூக்கம் மறந்து

வளர்த்தேன் ; விற்றேன்

கழனி மலடானாது வியாபாரி

செல்வந்தர் நானோ பொருளிள்ளார்

பொருளிள்ளார்

நடுநிலை மறந்த ஊடகம்

தன்நிலை மறந்த வேந்தன்

அருள் மறந்த அணங்கு

வாசிப்பை மறந்த கல்வியாளர்

தேசபக்தி மறந்த வீரன்

தொண்டு மறந்த ஊழியன்

பொருளிள்ளார் வாழ தகுதியில்லார்.

Saturday, April 25, 2020

விண்ணப்பம்

உன் விழியில் கைதானேன் !

அகத்தில் சிறைபட்டது போதும் !

அறமாய் இல்லறம் இணைவோம் .

இனி பிரிவு ஏது ?

ஞாலம் வாழும் கதிரோன் நிலவும்

நாம் ஆவோம் ! விண்ணப்பம் ஏற்றிடு !

முப்போழுதும் அறுசுவை கலந்த வாழ்வு வாழ்வோம் . . . .

Friday, April 24, 2020

அறம்

நற்செயல் செய்தலும்
நன்நெறி நடத்தலும்
குறள் படித்தலும்
மகிழ்வோடு வாழ்தலும்
சுற்றம் நிறைவாய் சேர்த்தலும்
பிறர் உயர்வு கண்டு புழுங்காதலும்
அறம் ! நல்வாழ்வு !

Tuesday, April 14, 2020

வீட்டில் 21

*வீட்டில் 21*

ஆறறிவு என்ற கர்வம்
ஓர் அறிவு தொடுத்த போரில்
யானைக்கும் அடிசறுக்கும் என புரிந்தோம்!

தனித்திருந்த வீடுகள் !
குவிந்திருந்த மணித்துளிகள் !
இல்லம் நிறைந்த பாசமழைகள் !

காவலாய் நின்றது ! சாதியல்ல !
காவல் சுகாதார மருத்துவ தெய்வங்கள் !

எறும்புகள் கற்றுத் தந்த சேமிப்பை
தவறாய் புரிந்து
பதுக்கினர் நுகர்பொருள்
உயர்த்தினர் விலை !
ஏழை வயிற்றை சுரண்டி
சேர்த்தார் பொருள் !
அவன் உண்பதும் உணவுதானே!
கொல்லை விலை விற்று
கொரோனா விட
பெரும் கிருமியானான். .

தப்பி பிழைக்க
வீட்டில் இருப்போம் தம்பி !

இன்றைய தேவை பொருளல்ல உயிர் !
நமது தலைமுறை.

*இரா.முத்து கணேஷ்*
*முதுகலை வேதியியல்ஆசிரியர்*
*நாடார் மேல்நிலைப் பள்ளி*
*கோவில்பட்டி*

புலனம் -9944468677

Wednesday, March 18, 2020

வெள்ளந்திச் சிரிப்பினிலே

வெள்ளந்திச் சிரிப்பினிலே . .
உலகம் இயங்குதம்மா..

உன் கைக்கும் வியர்வைக்கும் மந்திரசக்தி
இருக்கும்மா. .

மனிதன் கால்பட்டால்
புல்தரையும் கட்டாந்தரை
ஆகுதம்மா. .

உன் கால்பட்டு வெற்றுநிலமும் காய் கனி தந்து உலகுக்கு தாய் ஆகுதம்மா . .

உலகம் மறந்த தெய்வமே !!

உம் உழைப்பாலே எம் பசி போகுது. . .

நன்றி கடன் தீர்க்க
உன் மகனாய் பிறப்பேன் அம்மா. ‌.

- இரா.முத்து கணேஷ்
ஆசிரியர்
கோவில்பட்டி

Tuesday, March 17, 2020

புதுயுகம் படைப்போம்

புத்தக சோலையில் நீராடி !
கவிதைகளால் பாச்சூடி !
இலக்கண இலக்கியங்களால் பூச்சூடி !
புதுயுகம் படைப்போம்.

உழைத்து காக்கும் உழவரும் !
நாணயமாய் வாழும் பாட்டாளியும் !
குயவரும் நெசவரும் !
காப்பாளியும் கல்வியாளரும் !
மதிப்பு காண புதுயுகம் படைப்போம்.

நித்தம் கண்விழித்து !
உடல் வருத்தி உழைத்து !
சேர்த்த பொருள் காத்து !
மகிழ்வும் உடல்வளமும் பூத்து !
சுரண்டி வாழ்வோர் வெறுத்து !
புதுயுகம் படைப்போம்.

மூடபோதனை ஒழித்து !
சாதி பேதம் எரித்து !
உழைப்பை மதித்து !
அறிவை வளர்த்து !
அகந்தை துரத்து !
பட்டறிவோடு பகுத்தறிவு சேர்த்து !
அன்பால் புதுயுகம் படைப்போம்.

- இரா.முத்து கணேஷ்
ஆசிரியர்
கோவில்பட்டி.

Saturday, March 7, 2020

மகளிர் தினம்

வேந்தனையும் !
உயிர் கொண்ட உலகையும்!
படைத்து!

நான் என்ற அடக்குமுறையால்
அடக்கப்பட்ட போதும் !

பெருந்தன்மையால் !
குறுகி !
பேரண்பால் இல்லம் பெறுகி !

ஞாயிற்றை மறந்து !
தன் சுற்றம் துறந்து !
செல்லுமிடம் சொர்க்கமாக்கும் ஞாயிறு !

மேலாண்மை அவள் சிறப்பு !
தன் வயிற்றை மறந்து
பிள்ளை பசி போக்கும் அமுதசுரபி!

பூட்டியாய் !
பாட்டியாய் !
தாயாய் !
சகோதரியாய் !
மகளாய் !

இல்லம் காக்கும்
காவல் தெய்வங்களுக்கு
மகளிர் தின வாழ்த்துகள்!

இரா.முத்து கணேஷ்
முதுகலை வேதியியல்ஆசிரியர்
நாடார் மேல்நிலைப் பள்ளி
கோவில்பட்டி

Thursday, February 27, 2020

எழுக தமிழ்

வையம் கடந்து
வானம் பறந்து
மொழிகளில் சிறந்து
மக்களை கவர்ந்து
எழுக தமிழ் !

எளியோர் தமிழ்
எங்கள் தமிழ்
காலமும் தமிழ்
பாலமும் தமிழ்
ஞாலமும் தமிழ்
எழுக தமிழ் !!

கருத்து குவியல்
அறங்களின் புதையல்
புகழின் சமையல்
நவரசத்தின் அவியல்
எங்கள் தமிழ்
எழுக தமிழ் !!!

கற்க இனிது
பேச எளிது
உறவாடிட தூது
அறிஞர்க்கு அமுது
எங்கள் தமிழ்
தாய்மை தமிழ்
வாய்மை தமிழ்
மேன்மை தமிழ்
என்றும் தமிழ்
எழுக தமிழ் !!!!

-இரா.முத்து கணேஷ் M.sc B.ED
முதுகலை வேதியியல் ஆசிரியர்
நாடார் மேல்நிலைப் பள்ளி
கோவில்பட்டி
புலனம்-9944468677